french open 2022: களிமண்தரை கிங்: டென்னிஸிலிருந்து ஓய்வா? ரஃபேல் நடால் பதில்

By Pothy RajFirst Published Jun 6, 2022, 12:18 PM IST
Highlights

french open 2022: டென்னிஸ் விளையாட்டில் களிமண் தரை ஆடுகளத்தின் முடிசூடா மன்னாக வலரும் வரும் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தெரிவித்துள்ளார்

டென்னிஸ் விளையாட்டில் களிமண் தரை ஆடுகளத்தின் முடிசூடா மன்னாக வலரும் வரும் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தெரிவித்துள்ளார்

பாரிஸில் நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 14-வது முறையாக ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றஇனார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி நடால் வரலாற்று சாதனை படைத்தார். பிரெஞ்சு ஓபனில் 14பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை நடால் படைத்தார். 

பிரெஞ்சு ஓபனில் 14, விம்பிள்டனில் 2பட்டம்(2008, 2010), ஆஸ்திரேலியன் ஓபனில் 2 சாம்பியன்  பட்டம்(2022, 2009), யுஎஸ் ஓபனில்(2010, 2013, 2017,2019) 4 கோப்பைகளை நடால் வென்று மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் நடாலுக்கு கால்பாதத்தலி் காயம் ஏற்பட்டு நீண்டகாலமாக சிகிச்சை எடுத்து வருகிறார். பிரெஞ்சு ஓபன் போட்டியில்கூட தொடர்ந்து சிகிச்சை எடுத்தவாரே விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றார். காயம் காரணமாக, நடால் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறும் மனநிலையில் இருக்கிறாரா என்ற பேச்சு எழுந்தது. வரும் 27ம் தேதி லண்டனில் மற்றொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடர் தொடங்குகிறது. 

 போட்டி முடிந்தபின் பரிசளிப்பு விழாவில் ஓய்வு தகவல் குறித்து நடால் பதில் அளி்த்தார். அவர் கூறுகையில் “ எனக்கு டென்னிஸ் விளையாட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. என்னுடைய உடல்நிலை சரியாக இருந்தால், நான் வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவேன்.

விம்பிள்டனை தவறவிடுவதற்கு சாதாரனபோட்டித் தொடர்அல்ல. விம்பிள்டன் தொடருக்கு முன்னுரிமை அளிப்பேன், எப்போதுமே விம்பிள்டனுக்கு என்னுடைய முன்னுரிமை இருக்கும். 

பிரெஞ்சு ஓபனில் நான் தொடர்ந்து சிகிச்சை எடுத்துதான் போட்டிகளில் பங்கேற்றேன். அதிகமான ஊசிகளைஎடுத்துக்கொண்டேன். தொடர்ந்து இதுபோல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. எப்போதாவது ஒருமுறை ஊசிபோட்டுக்கொண்டு விளையாடலாம், தொடர்ந்து விளையாட முடியாது. இது வாழ்க்கைத்தத்துவமும் இல்லை. பார்க்கலாம். நான் நேர்மறையாக வாழ்க்கையை அணுகும் எண்ணம் கொண்டவன். அனைத்தும்சரியான வழியில் நடந்தால், உடல்நிலை சீராக இருந்தால், அடுத்த போட்டித் தொடரில் நாம் சந்திக்கலாம். 

இவ்வாறு நடால் தெரிவித்தார்
 

click me!