இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் நபர் தலையீடும், ஆதிக்கமும் அதிகம் இருப்பதாகக் கூறி, தற்காலிகமாக தடை விதித்து சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பு(fifa) உத்தரவிட்டுள்ளது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் நபர் தலையீடும், ஆதிக்கமும் அதிகம் இருப்பதாகக் கூறி, தற்காலிகமாக தடை விதித்து சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பு(fifa) உத்தரவிட்டுள்ளது.
இதனால், திட்டமிட்டபடி 17வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து உலகக் கோப்பையை இந்தியா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 11 முதல் 30ம் தேதிவரை இந்தியாவில் உலகக் கோப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் அது நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
undefined
பையன் பட்டைய கிளப்புறான்.. இந்திய ஃபாஸ்ட் பவுலரை கண்டு வியந்த க்ளென் மெக்ராத்..!
கடந்த 85 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியகால்பந்து கூட்டமைப்புக்கு பிபா அமைப்பு தடை விதித்துள்ளது.
பிபா கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “ இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் நபர்கள் தலையீடும் ஆதிக்கமும் அதிகம் இருக்கிறது. இது பிபா விதிகளை அப்பட்டமாக மீறியதாகும். ஆதலால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குஇடைக்காலத் தடைவிதிக்க ஒருமனதாக பிபா கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு அதிகாரம் முழுமையாக கிடைத்தால், அதன் உறுப்பினர்கள் புதிதாக மாற்றப்படும்போது, இந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்படும். இந்த தடை உத்தரவால், 2022,ம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 30ம் தேதிவரை 17வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் திட்டமிட்டபடி நடத்த முடியாது. அடுத்த நடவடிக்கைகளை பிபா அமைப்பு ஆலோசித்து வருகிறது, தேவைப்படும்பட்சத்தில் கவுன்சிலிடம் இது குறித்து ஆலோசிப்போம்” எனத் தெரிவித்துள்ளது.
ஒரு இடம் தான் இருக்கு.. இந்திய டி20 அணியில் தினேஷ் கார்த்திக்கிடம் இடத்தை இழக்கும் ரிஷப் பண்ட்..?
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரிலிருந்து எந்தவிதமானதேர்தலையும் நடத்தவில்லை என்று எனக் கூறி, கடந்த மே மாதம் 18ம் தேதி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரபுல் படேலை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குப்பின் பிபா அதிரடி தடை விதித்துள்ளது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வாகம் செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர் தவே தலைமையில் ஒரு குழு உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
பிபா அமைப்பு கால்பந்து கூட்டமைப்பில் எந்தவிதமான 3வது நபர் தலையீட்டையும் விரும்பாது. அது நீதிமன்றமாக இருந்தாலும், அரசாங்கமாக இருந்தாலும் சரி. இது இந்தியாவுக்கும் பொருந்தும். இந்த விவகாரத்தில் பிபா கதவுகள் திறந்தே இருக்கும். இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் பிபா தொடர்ந்து தொடர்பில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தல் வரும் 28ம் தேதி நடத்தப்பட உள்ளது.