
ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளான இன்று ரஷியா - சௌதி அரேபியா அணிகள் மோதுகின்றனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் ரஷியாவும் - சௌதி அரேபியாவும் மோதுகின்றன.
ரஷியா - சௌதி அரேபியா அணிகள் மோதும் முதல் ஆட்டம், மாஸ்கோவில் 80 ஆயிரம் பேர் அமரும் வகையிலான வசதி கொண்ட லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. முதல் நாளில் இந்த ஓர் ஆட்டம் மட்டுமே நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை போட்டியை ஒட்டி அனைத்து அணிகளும், சர்வதேச நாடுகளில் இருந்து ரசிகர்களும் ரஷியாவில் குவிந்துள்ளனர்.
அங்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.