கோலியை சமாளிக்க இங்கிலாந்தின் பலே வியூகம்!! ரன் மெஷினை ஆஃப் செய்ய மீண்டும் களமிறங்கும் ஓய்வு பெற்ற வீரர்..?

First Published Jul 22, 2018, 12:32 PM IST
Highlights
england plan to tackle virat kohli


இந்திய அணி கேப்டன் விராட் கோலியை, டெஸ்ட் போட்டிகளில் சமாளிக்க, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ஸ்பின்னர் அடில் ரஷீத்தை மீண்டும் அணியில் எடுக்க இங்கிலாந்து அணி முடிவு செய்துள்ளது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர். இந்திய அணியின் போட்டி முடிவை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான வீரர் விராட் கோலி.

இந்நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகளில் விராட் கோலியின் பேட்டிங் கண்டிப்பாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விராட் கோலியை வீழ்த்திவிட்டால், வெற்றியை நெருங்கலாம் என்பது இங்கிலாந்து மட்டுமல்ல, பெரும்பாலான அணிகளின் எண்ணமும் அதுதான். 

டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை கட்டுப்படுத்த இங்கிலாந்து அணி, ஓய்வு பெற்ற வீரர் ஒருவரை மீண்டும் அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. 3 ஒருநாள் போட்டிகளில் 2ல் கோலியை வீழ்த்திய அடில் ரஷீத் தான் அவர். 

இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 38 விக்கெட்டுகளை வீழ்த்திய அடில் ரஷீத், கடந்த 2016 டிசம்பரில் டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆட உள்ளதாக தெரிவித்தார். 

இந்நிலையில், கோலியை சமாளிப்பதற்காக மீண்டும் அடில் ரஷீத்தை டெஸ்ட் அணியில் எடுப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அடில் ரஷீத், அணி நிர்வாகம் மீண்டும் அழைத்தால், ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டு டெஸ்ட் போட்டியில் ஆட தயாராக உள்ளதாக ரஷீத் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தின் வியூகம் பலனளிக்கிறதா? என்பதை களத்தில் பார்ப்போம்.. 
 

click me!