டோனி சொன்னா கரெக்டா இருக்கும் … DRS –ன்னா Decision Review System இல்ல !! டோனி ரிவியூ சிஸ்டம்.. புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் !!

By Selvanayagam PFirst Published Sep 24, 2018, 6:52 PM IST
Highlights

கிரிக்கெட் விளையாடும்போது அவுட், நாட்-அவுட் போன்ற பிரச்சனைகள் எழுந்தால் எது கரெக்ட் என டோனி கணித்தால் மிகச் சரியாக இருக்கும் என்றும் DRS என்றாலே டோனி ரிவியூ சிஸ்டம் தான் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுத்  தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டியில் மைதான நடுவர்கள் அவுட் கொடுப்பதில் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும். ஒரு வெற்றியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும்போது நடுவரின் தவறான முடிவால் அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியாகி விடும். இதனால் நடுவர் தீர்பை எதிர்த்து அப்பீல் செய்யும் முறையை  டிஆர்எஸ்  என அழைக்கின்றனர்.

அதாவது நடுவர் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து பேட்ஸ்மேன் அல்லது பீல்டிங் அணி கேப்டன் ரிவியூ கேட்கலாம். பந்து வீச்சு அணி ரிவியூ ஆப்சன் கேட்கும்போது, பந்து வீச்சாளரும், விக்கெட் கீப்பரும்தான் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

இவர்களுக்குத்தான் பந்து லைனில் பிட்ச் ஆனதா? பந்து பேட்டில் பட்டதா? ஸ்டம்பை தாக்குமா? ஸ்டம்பிற்கு மேல் செல்லுமா? என்பதை இவர்கள்தான் சரியாக கணிக்க வேண்டும்.

இதில் இந்திய அணியின்  விக்கெட் கீப்பர் டோனி வல்லவர். இவர் ரிவியூ ஆப்சனை கேட்க சொன்னால், கட்டாயம் அது அவுட்டாகத்தான் இருக்கும். ஒருமுறை ஜடேஜா டோனி பேச்சை கேட்காமல் ரிவியூ கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், டிஆர்எஸ் வெற்றி பெறவில்லை. இதனால் டோனி ஜடேஜா மீது கடும் கோபம் கொண்டா

பெரும்பாலும் டிஆர்எஸ் என்பது டோனி ரிவியூ சிஸ்டம் என்று அவரது ரசிகர்கள் அழைப்பதுண்டு. நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையிலானசூப்பர் 4’ ஆட்டம் நடைபெற்றதுபோது,  பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் 7 ஓவரில் பாகிஸ்தான் விக்கெட்டை இழக்கவில்லை.

ஆனால் 8 ஆவது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசிப் பந்தை இமாம் உல் ஹக் முன்னாள் வந்து தடுத்து ஆ முயன்றார். அப்போது பந்து பேடை தாக்கியது. மிக அதிக தூரம் முள்ளாள் வந்து ஆடியதால் பந்த ஸ்டம்பிஸ்கு மேல் சென்றுவிடுமோ என்ற சந்தேகம் சாகஹலுக்கும், ரோகித் சர்மாவுக்கும் ஏற்பட்டது.

ஆனால் டோனி எதையும் யோசிக்காமல் டிஆர்எஸ் கேட்க ரோகித் சர்மாவிற்கு சிக்னல் கொடுத்தார். முக்கியமான நபரிடம் இருந்து சிக்னல் வந்ததும் யோசிக்காமல் ரோகித் சர்மா ரிவியூ கேட்டார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லாம் இமாம் உல் ஹக் அவுட் என்பது தெரியவந்தது.

இதனால் டிஆர்எஸ் முறையில் டோனியின் அறிவாற்றல் குறித்து  சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். பெரும்பாலானோர் டிஆர்எஸ் என்றாலே டோனி ரிவியூ சி்ஸ்டம்தான் என்று புகழ்ந்து வருகின்றனர்.

click me!