Paris 2024: படகு போட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் நேத்ரா குமணன் – சாதனைகளின் பட்டியல்!

By Rsiva kumar  |  First Published Jul 23, 2024, 9:36 PM IST

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடருக்கான படகு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நேத்ரா குமணன் மற்றும் விஷ்ணு சரவணன் இருவரும் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.


பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் இடம் பெற்ற 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறன்றன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று 69 போட்டிகளில் 95 பதக்கங்களுக்காக போட்டி போடுகின்றனர்.

India At 2024 Summer Olympics: துப்பாக்கி, தடகளப் போட்டியில் இந்தியாவிற்கு அதிக பதக்கம் கிடைக்க வாய்ப்பு!

Tap to resize

Latest Videos

இதில் தமிழகம் சார்பில் 13 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில்,

  1. ஜெஸ்வின் ஆல்ட்ரின் - தடகளம்
  2. பிரவீன் சித்ரவேல் – தடகளம்
  3. சந்தோஷ் தமிழரசன் – தடகளம்
  4. ராஜேஷ் ரமேஷ் – தடகளம்
  5. சுபா வெங்கடேசன் – தடகளம்
  6. வித்யா ராமராஜ் – தடகளம்
  7. விஷ்ணு சரவணன் – படகு போட்டி
  8. நேத்ரா குமணன் – படகு போட்டி
  9. பிரித்விராஜ் தொண்டைமான் – துப்பாக்கி சுடுதல்
  10. இளவேனில் வளரிவன் – துப்பாக்கி சுடுதல்
  11. சரத் கமல் – டேபிள் டென்னிஸ்
  12. சத்யன், ஜி – டேபிள் டென்னிஸ்
  13. ஸ்ரீ ராம் பாலாஜி – டென்னிஸ்

ஆகியோர் ஆவர். இதில் 5 பேர் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரஜ் சோப்ரா முதல் மீராபாய் சானு வரையில் இந்தியாவிற்காக பதக்கம் வென்று கொடுத்தவர்கள் யார் யார் தெரியுமா?

இதுவரையில் ஒலிம்பிக்கில் இந்தியா 35 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உள்பட மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது. இந்த நிலையில் தான் தற்போது பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையானது 7ஐவிட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் படகு போட்டியில் கலந்து கொண்டுள்ள நேத்ரா குமணன் மற்றும் விஷ்ணு சரவணன் தற்போது போட்டிக்கு தயாராகியுள்ளனர். இதுவரையில் ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கம் கூட கைப்பற்றாத நேதா இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் கைப்பற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 Budget: ரூ.17,000 கோடி வருவாய் ஈட்டும் பிசிசிஐக்கு வரி இல்லை, தனிநபருக்கு 10 சதவிகிதம் வரியா?

யார் இந்த நேத்ரா குமணன்? சாதனைகள் என்னென்ன?

சென்னையைச் சேர்ந்தவர். வயதோ 27 மட்டுமே. தனது 12 வயது முதலே பாய்மர படகு போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். தேசிய அளவில் தனது 17ஆவது வயதில் படகு போட்டியில் கலந்து கொண்டார். தேசிய அளவில் நடந்த போட்டிகளில் 2 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். அதோடு 2 முறை 2ஆவது இடம் பிடித்திருக்கிறார்.

2014 – தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 7ஆவது இடம்.

2018 – இந்தோனேஷியாவின் ஜகார்தாவில் நடைபெற்ற போட்டியில் 5ஆவது இடம் பிடித்தார்.

2020 – அமெரிக்காவின் மியாமில் நடைபெற்ற ஹெம்பல் உலகக் கோப்பை தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலமாக உலகக் கோப்பை படகு போட்டியில் முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

2020 – டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் படகு போட்டியில் 35ஆவது இடம் பிடித்தார். இது அவரது முதல் ஒலிம்பிக் போட்டி.

2024 – தற்போது பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் மூலமாக 2ஆவது முறையாக ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று விளையாடுகிறார். ஆனால், இந்த முறை எப்படியும் பதக்கம் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிய மத்திய அரசு; பட்ஜெட்டில் 0/0 !! பீகார், ஆந்திராவிற்கு கொட்டிக்கொடுத்த பாஜக

click me!