சேவாக் ஒரு ஜீனியஸ்.. தம்பிக்கு அவ்ளோ சீன்லாம் கிடையாது.. ஓவரா பேசாதீங்க!! தாதா அதிரடி

By karthikeyan VFirst Published Oct 5, 2018, 10:58 AM IST
Highlights

பிரித்வி ஷா மிகச்சிறந்த வீரர்; ஆனால் அவரை சேவாக்குடன் ஒப்பிட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
 

பிரித்வி ஷா மிகச்சிறந்த வீரர்; ஆனால் அவரை சேவாக்குடன் ஒப்பிட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு பல இளம் திறமைகள் கிடைத்து கொண்டிருக்கின்றன. ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, மயன்க் அகர்வால் என மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் கிடைத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நேற்று ராஜ்கோட்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆட பிரித்வி ஷா வாய்ப்பு பெற்றார். இதுதான் இந்திய அணிக்காக அவர் ஆடும் முதல் சர்வதேச போட்டி. 

அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். 134 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. களமிறங்கியது முதலே களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பவுண்டரிகளுக்கு விரட்டிக்கொண்டே இருந்தார். குறிப்பாக பேக்ஃபூட் ஷாட்களை அபாரமாக ஆடினார். 

டெஸ்ட் கிரிக்கெட்டின் வழக்கமான பேட்டிங்கை ஆடாமல், ஒருநாள் போட்டி போல ஆடினார். இவரது ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் மெச்சினர். கிரிக்கெட் ரசிகர்களும் இவரது ஆட்டத்தை கொண்டாடினர். இவரது பேட்டிங் ஸ்டைல் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை ஒத்திருப்பதால், இந்திய அணியின் அடுத்த சச்சின் என அழைக்கப்படுகிறார். மேலும் இவரது நேற்றைய ஆட்டத்தை பார்த்து பலரும் இவரை சேவாக்குடன் ஒப்பிடுகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கங்குலி, பிரித்வி ஷாவை சேவாக்குடன் ஒப்பிடக்கூடாது. சேவாக் ஒரு ஜீனியஸ். அதனால் பிரித்வியை முன்னாள் ஜாம்பவான்களுடன் ஒப்பிடக்கூடாது. அவரை உலகம் முழுதும் அனைத்து நாடுகளிலும் ஆட வைக்க வேண்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அனைத்து நாடுகளிலும் ரன்களை குவிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் பிரித்வி ஷா. அதற்காக சேவாக்குடன் ஒப்பிடக்கூடாது. 

பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடினார் பிரித்வி. 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பையில் ஆடுவது மாதிரி அல்ல; டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது முற்றிலும் வித்தியாசமானது. பிரித்வியின் பேட்டிங் நன்றாக இருந்தது. இந்திய அணிக்காக நீண்ட காலம் அவர் ஆட வேண்டும். பேக்ஃபூட் ஷாட்களை சிறப்பாக ஆடுவதால் ஆஸ்திரேலியாவிலும் பிரித்வி நன்றாக ஆடி ரன்களை குவிப்பார் என நம்பிக்கை தெரிவித்த கங்குலி, பிரித்விக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
 

click me!