டைமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை

By karthikeyan VFirst Published Sep 9, 2022, 2:15 PM IST
Highlights

டைமண்ட் லீக் தடகள போட்டி தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
 

டைமண்ட் லீக் தடகள போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நடந்துவருகின்றன. இந்த டைமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்து வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். அப்போது காயமடைந்ததால், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த்தில் கலந்துகொள்ளவில்லை.

இதையும் படிங்க - விராட் கோலி சதம்.. புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்..! ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி

ஆனால் காயத்திலிருந்து மீண்டு கடும் பயிற்சி மேற்கொண்ட நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டில் 90 மீ தூரம் வீசுவதே தனது இலக்கு என்றார். அதற்காக கடுமையாகவும் உழைத்தார்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நடந்த டைமண்ட் லீக் தடகள தொடரில் ஈட்டி எறிதல் ஃபைனலில், முதல் த்ரோவை ஃபவுலாக வீசிய நீரஜ் சோப்ரா, 2வது முயற்சியில் செம கம்பேக் கொடுத்த நீரஜ் சோப்ரா, 88.44மீ தூரம் வீசினார். அதன்பின்னர் கடைசி 2 முயற்சிகளிலும் அதைவிட குறைவான தூரமே வீசினார் என்றாலும், 88.44 மீ தூரம் வீசியதால் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதையும் படிங்க - Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி

டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார்.
 

click me!