எத்தனை பேரு சோலிய முடிச்சு விட்ருக்கேன்.. என்கிட்டயேவா? வீடியோ

By karthikeyan VFirst Published Feb 9, 2019, 11:11 AM IST
Highlights

தம்பி நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்ப்பா என்ற வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், அவ்வப்போது சில சம்பவங்களை செய்துகொண்டே இருக்கிறார் தோனி.
 

ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு பவுலர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதில் வல்லவரான தோனிக்கே ஆட்டம் காட்ட முயன்றார் இஷ் சோதி. ஆனால் அதை தோனி முறியடித்துவிட்டார்.

அனுபவ விக்கெட் கீப்பரான தோனி, எந்த பந்தை எப்படி போட வேண்டும் என்று பவுலர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருப்பார். எதிரணி பேட்ஸ்மேனை வீழ்த்த எந்தவித திட்டமும் இல்லாமல் பவுலர்கள் நிராயுதபாணியாக இருக்கும்போது, அவர்களுக்கு சரியான ஆலோசனையை வழங்கி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவது தோனி வழக்கமாக செய்துவரும் காரியம். 

எந்த பந்தை எப்படி போட வேண்டும் என பவுலர்களை வழிநடத்துவார். அதனால் அவருக்கு எதிராக தீட்டப்படும் திட்டங்களை அவரால் எளிதில் கண்டறிந்து அதை முறியடிக்க முடியும். ஸ்பின் பவுலிங்கில் பேட்ஸ்மேன் இறங்கிவரும் போது பந்தை ஆஃப் திசையிலோ அல்லது லெக் திசையிலோ ஓரமாக போடுமாறு பவுலருக்கு சிக்னலை கொடுத்து ஸ்டம்பிங் செய்யும் வித்தையை கற்றுக்கொடுத்ததே தோனிதான். தோனியிடமே அதை செய்ய நினைத்த இஷ் சோதியின் திட்டத்தை முறியடித்தார் தோனி. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 159 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டும்போது, தோனியும் ரிஷப் பண்ட்டும் களத்தில் நின்றபோது, இஷ் சோதி 16வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை தோனி எதிர்கொண்டார். தோனி பொதுவாக ஸ்பின் பவுலிங்கை இரண்டு ஸ்டெப் இறங்கிவந்து டிரைவ் ஆடுவது வழக்கம். அதேபோலவே இரண்டு ஸ்டெப் இறங்கிவர, சோதி பந்தை ஆஃப் திசையில் விலக்கி வீசினார். உடனே சுதாரித்த தோனி, அந்த பந்தை லாவகமாக பாயிண்ட் திசையில் தட்டிவிட்டு சிங்கிள் ஓடினார். 

pic.twitter.com/kRHkJUthkD

— Baahubali (@bahubalikabadla)

தம்பி நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்ப்பா என்ற வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், அவ்வப்போது சில சம்பவங்களை செய்துகொண்டே இருக்கிறார் தோனி.
 

click me!