
கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான தோனி, 100-வது அரைசதம் அடித்து அடுத்த சாதனை நடத்தியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தோனி. இவர் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து தனக்கென்று ரசிகர்களை குவித்து வைத்துள்ளார்.
சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில் பேட்ஸ்மேனாக இன்னுமொரு சாதனையை எட்டியுள்ளார் தோனி. அது என்னவென்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்தபோது களமிறங்கிய தோனி, அரை சதம் அடித்து இந்திய அணி 250 ஓட்டங்களை எட்ட உதவினார்.
அவர், 88 பந்துகளில் 2 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் உட்பட 79 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நேற்றைய அரை சதம், சர்வதேச போட்டிகளில் டெஸ்ட் உட்பட ஒட்டு மொத்தமாக 100 அரை சதம் என்ற மைல் கல்லை எட்டியது தான் அந்த சாதனை.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய 14-வது வீரர் தோனி. இந்திய வீரர்களை பொறுத்தவரை தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரங் கங்குலி அடுத்தபடியாக 4-வது வீரராக இந்த சாதனையை தோனி படைத்துள்ளார்.
ஒட்டு மொத்தமாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 164 அரைசதங்கள் அடித்து தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா 153 அரைசதம் அடித்து இரண்டாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் கல்லீஸ் 149 அரைசதம் அடித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.