
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு களமிறங்கியுள்ள சென்னை அணி மிரட்டலாக ஆடிவருகிறது. 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது.
சென்னை அணி வெற்றிகளை குவிப்பதற்கு நிகராக சென்னை ரசிகர்கள், தோனியின் ஆட்டத்தையும் கொண்டாடிவருகின்றனர். பொதுவாக கடைசி வரிசையில் களமிறங்கும் தோனி, இந்த தொடரில் 4 அல்லது 5வது இடங்களில் களமிறங்கி அசத்தலாக ஆடிவருகிறார்.
10 போட்டிகளில் ஆடியுள்ள தோனி, 3 அரைசதங்களுடன் 360 ரன்களை குவித்துள்ளார். இதுவரை அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில், அம்பாதி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட்டிற்கு அடுத்தபடியாக தோனி மூன்றாமிடத்தில் இருக்கிறார்.
அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களில், 27 சிக்ஸர்களுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். 23 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்தார் கெய்ல். கொல்கத்தாவிற்கு எதிரான கடந்த போட்டியில், 4 சிக்ஸர்கள் விளாசிய தோனி, கெய்லை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.
அதன்பிறகு மும்பைக்கு எதிரான போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி, 25 சிக்ஸர்களுடன் கெய்ல் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார் தோனி.
இதன்மூலம் மீண்டும் கெய்லை முந்தி 27 சிக்ஸர்களுடன் தோனி முதலிடத்தை பிடித்துவிட்டார். 25 சிக்ஸர்களுடன் கெய்ல் இரண்டாமிடத்திலும், 23 சிக்ஸர்கள் விளாசியுள்ள டிவில்லியர்ஸ் மற்றும் ரசல் ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காமிடத்திலும் உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.