
இந்த ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறார். நல்ல ஃபார்மில் இருப்பதால் போட்டிக்கு போட்டி அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வருகிறார்.
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்களான டுபிளெசிஸும் ஷேன் வாட்சனும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பிறகு களமிறங்கிய ரெய்னா மற்றும் ராயுடு ஆகியோர் தங்கள் பங்கிற்கு முறையே 31 மற்றும் 21 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய தோனி, அதிரடியாக ஆடினார். 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் தோனி. இதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களும் அடக்கம். இதையடுத்து சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
178 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுனில் நரைன் அதிரடியான அமைத்து கொடுத்தார். அதன்பிறகு ஷுப்மன் கில்லின் அரைசதம் மற்றும் தினேஷ் கார்த்தின் அதிரடியான பேட்டிங்கால், கொல்கத்தா அணி, 17.4 ஓவருக்கே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அதிரடியாக ஆடிய தோனி, 4 சிக்ஸர்களை விளாசினார். இந்த போட்டியில் 4 சிக்ஸர்கள் விளாசியதன்மூலம் இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை தோனி பெறுகிறார். 9 போட்டிகளில் ஆடியுள்ள தோனி, 24 சிக்ஸரக்ளை அடித்துள்ளார்.
தோனிக்கு அடுத்த இடத்தில், 4 போட்டிகளில் 23 சிக்ஸர்கள் விளாசிய கெய்ல் உள்ளார். அதே 23 சிக்ஸர்களுடன் டிவில்லியர்ஸ் மூன்றாவது இடத்திலும் ஆண்ட்ரே ரசல் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
இந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக பேட்டிங் செய்துவரும் தோனி, 329 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.