அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கியது ஏன்..? தோனி அதிரடி விளக்கம்

By karthikeyan VFirst Published Aug 10, 2018, 10:59 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்து மைதானத்தில் இருந்து வெளியேறியபோது, அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கியது ஏன் என தோனி விளக்கமளித்துள்ளார். 
 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்து மைதானத்தில் இருந்து வெளியேறியபோது, அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கியது ஏன் என தோனி விளக்கமளித்துள்ளார். 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டி20 தொடரை இந்திய அணியும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் வென்றன. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று தொடங்க வேண்டிய இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக நேற்றைய முதல்நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்று போட்டி தொடங்கப்பட உள்ளது. 

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்து மைதானத்தில் இருந்து வீரர்கள் வெளியேறியபோது, அம்பயரிடம் இருந்து பந்தை கேட்டு வாங்கினார் தோனி. தோனியின் இந்த செயலால், அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் இது குறித்து தோனி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மறுப்பு தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், டெஸ்ட் போட்டிகளில் ஆடாத தோனி நாடு திரும்பிவிட்டார். இந்நிலையில், அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கியது ஏன் என்பது தொடர்பாக தோனி விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய தோனி, அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. எனவே அங்கு பந்து எப்படி ஸ்விங் ஆகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எதிரணியினர் அந்த வியூகத்தை தெரிந்து வைத்துள்ளனர். நாமும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 50 ஓவர்கள் வீசப்பட்டபிறகு அந்த பந்து ஐசிசிக்கு தேவையற்றது. எனவே அந்த பந்து எப்படி ஸ்விங் ஆகிறது என்பதை பந்தின் தன்மையை கொண்டு ஆராய வேண்டிய தேவை உள்ளதால், அந்த பந்தை வாங்கி பவுலிங் பயிற்சியாளரிடம் கொடுத்தேன் என தோனி விளக்கமளித்துள்ளார். 
 

click me!