இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் குறித்து அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்போவதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷண் சரண் சிங் பாஜக எம்பியும் கூட. அவரை அந்த பதவியிலிருந்து நீக்கக்கோரியும், நடப்பு மல்யுத்த அமைப்பையே கலைத்துவிட்டு புதிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து மேரி கோம் தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
சென்னைக்கு எதிராக ரோகித் சர்மாவிற்கு அடுத்தபடியாக சாதித்து காட்டிய இளம் கேப்டன் சஞ்சு சாம்சன்!
அந்த கமிட்டி விசாரண மேற்கொண்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை வரும் வரையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பொறுப்பிலிருந்து 4 வாரங்களுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்கள் ஆன நிலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக டெல்லி ஜந்தர் மந்திரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு, பகலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் என்ற பஜ்ரங் புனியா,விக்னேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரொம்ப பெரிய பிளான்லாம் போடல; சிம்பிள் பிளான் போட்டு சிஎஸ்கேவை காலி பண்ணிட்டோம் - சஞ்சு சாம்சன்!
இதற்கிடையில் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக 7 மல்யுத்த வீரர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக கடந்த செவ்வாயன்று உச்சநீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், அவர் மீது இன்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்போவதாக டெல்லி போலிஸ் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எனினும், டெல்லியில் நடந்து வரும் போராட்டத்திற்கு விளையாட்டு வீரர்களான கபில் தேவ், சானியா மிர்சா, இர்பான் பதான் உள்ளிட்டோர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.