இந்த ஐபிஎல் தொடரில் இதுதான் முதல்முறை!! வரலாறு என்ன சொல்கிறது..?

 
Published : Apr 30, 2018, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
இந்த ஐபிஎல் தொடரில் இதுதான் முதல்முறை!! வரலாறு என்ன சொல்கிறது..?

சுருக்கம்

delhi daredevils face csk today

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் டெல்லி அணியும் முதல்முறையாக இன்று மோதுகின்றன. இன்று இரவு 8 மணிக்கு புனே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் ஆடி 2ல் மட்டுமே வென்றுள்ள டெல்லி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

சென்னை அணி இதுவரை நன்றாகவே ஆடியுள்ளது. மும்பை அணியிடமும் பஞ்சாப் அணியிடமும் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. சென்னை அணியில் வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் அவதிப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் சாஹர் காயம் காரணமாக 2 வாரங்களுக்கு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அதேநேரத்தில் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி, இந்தியா திரும்பியுள்ளார். இன்றைய போட்டியில் நிகிடி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற போட்டிகளில் சரியாக ஆடாத பில்லிங்ஸுக்கு பதில், டுபிளெசிஸோ அல்லது ஆல்ரவுண்டரான டேவிட் வில்லேவோ அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. தாஹிர் இந்த போட்டியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. 

தொடர் தோல்விகளை சந்தித்த டெல்லி அணி, இளம் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் கொல்கத்தாவை வீழ்த்தி உற்சாகத்துடன் வெகுண்டெழுந்துள்ளது. இனிவரும் போட்டிகள், அடுத்த சுற்றுக்கான அந்த அணியின் வாய்ப்பை தக்கவைப்பதற்கானவை என்பதால், சென்னையை வீழ்த்த கடுமையாக டெல்லி அணி போராடும். 

டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் பிரித்வி ஷாவும் நல்ல ஃபார்மில் உள்ளனர். ரிஷப் பண்ட், கோலின் முன்ரோ, மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்களும் உள்ளனர். பவுலிங்கை பொறுத்தவரை டிரண்ட் போல்ட் மிரட்டிவருகிறார்.

அனுபவ வீரர்களுடன் சென்னை அணியும் இளம் படையுடன் டெல்லி அணியும் இன்று மோதுகின்றன. எனவே போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சென்னை அணியின் உத்தேச வீரர்கள்: 

அம்பாதி ராயுடு, வாட்சன், ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் வில்லே, பிராவோ, ரவீந்திர ஜடேஜா, கருண் ஷர்மா, ஹர்பஜன் சிங், ஷர்துல் தாகூர், லுங்கி நிகிடி

டெல்லி அணியின் உத்தேச வீரர்கள்:

பிரித்வி ஷா, கோலின் முன்ரோ, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், மேக்ஸ்வெல், விஜய் சங்கர், ராகுல் டேவாடியா, பிளன்கெட், அமித் மிஸ்ரா, ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான்

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் 11ல் சென்னை அணியும் 5ல் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளன.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி