இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த டெல்லி கோர்ட்..!

By karthikeyan VFirst Published May 15, 2021, 7:29 PM IST
Highlights

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு கொலை வழக்கில், பிணையில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது டெல்லி கோர்ட்.
 

ஒலிம்பிக்கில் 2 முறை இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த மல்யுத்த வீரர் சுஷில் குமார். சுஷில் குமாரை சாகர் தன்கட் தொடர்ந்து விமர்சித்துவந்ததாக கூறப்படுகிறது. அதனால் கடும் கோபமடைந்து, சாகருக்கு பாடம் புகட்ட விரும்பிய சுஷில் குமார், சாகர் தன்கட்டை அவரின் வீட்டிலிருந்து தனது நண்பர்களின் உதவியுடன் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கிற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு சுஷில் குமாரும், அவரின் நண்பர்களும் தப்பிவிட்டனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாகர் தான்கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், சுஷில் குமார் மீதான வழக்கு கொலை வழக்காக பதியப்பட்டது.

மல்யுத்த வீரர் சுஷில் குமார் தலைமறைவாக உள்ள நிலையில், இந்த வழக்கிலிருந்து தப்ப, வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிடாமல் தடுக்க, தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது டெல்லி போலீஸ்.

சுஷில் குமார் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து சுஷில் குமார் பிணையில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது டெல்லி கோர்ட். 
 

click me!