இந்திய வீரர்கள் இருவரை கடுமையாக விமர்சித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்

First Published Jul 7, 2018, 3:21 PM IST
Highlights
david willey criticize bhuvi and kuldeep


முதல் டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோரின் செயல்பாடுகளை இங்கிலாந்து ஆல் ரவுண்டர் டேவிட் வில்லே விமர்சித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. அதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில், முதல் போட்டியில் பந்துவீச ஓடிவந்து வீசாமல் நிறுத்தியது தொடர்பாக புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே விமர்சித்துள்ளார்.

முதல் டி20 போட்டியில் குல்தீப் யாதவ் இரண்டு முறை பந்துவீச ஒடிவந்து வீசாமல் நிறுத்தினார். அதேபோல வில்லே பேட்டிங் செய்த கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமார் ஓடிவந்து பந்தைவீசாமல் நிறுத்தினார். இதையடுத்து வில்லேவிற்கு புவனேஷ்வருக்கும் இடையே சிறு வாக்குவாதம் நடந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டேவிட் வில்லே, புவனேஷ்வர் குமார் நான் என்ன செய்கிறேன் என்பதை பார்ப்பதற்காகவே பந்துவீசாமல் சென்றார் என நினைக்கிறேன். இந்திய பவுலர்கள் சில முறை இவ்வாறு செய்தனர். ஸ்பின்னர்களும் இருமுறை அப்படி செய்தனர். இதுதொடர்பான விதிமுறைகள் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இது விரும்பத்தக்கதல்ல. இது தேவையற்றது என கருதுகிறேன். 

அவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பது எனது வேலையல்ல. தனிப்பட்ட முறையில், நான் அவ்வாறு செய்யமாட்டேன். இது ஆரோக்கியமானது இல்லை என்பது எனது கருத்து என வில்லே தெரிவித்தார். 

click me!