csk vs mi: அப்ரிடி கண்ணை திறந்து பேட்செய்தாரா! நம்பமுடியுதா: கையில் எண்ணெய் தேய்த்து கேட்ச் பிடித்த சிஎஸ்கே

By Pothy RajFirst Published Apr 22, 2022, 10:29 AM IST
Highlights

csk vs mi: கையில் விளக்கு எண்ணெயை தேய்த்து கேட்ச் பிடிக்க முயன்றதுபோல் நேற்றைய ஐபிஎல் டி20 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியினர் பீல்டிங் செய்தனர்.

கையில் விளக்கு எண்ணெயை தேய்த்து கேட்ச் பிடிக்க முயன்றதுபோல் நேற்றைய ஐபிஎல் டி20 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியினர் பீல்டிங் செய்தனர்.

இப்படியா கேட்ச்சுகளை கோட்டை விடுவது, 4 கேட்சுகள், தோனி ஒரு ஸ்டெம்பிங்கை கோட்டை விட்டது என 5 வாய்ப்புகளை, உதவிகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிஎஸ்கே செய்தனர். ஆனால், இவ்வளவு உதவிகள் செய்தபோதிலும்கூட, மும்பை இந்தியன்ஸ் அணியால் வெல்ல முடியவில்லை என்பதை என்னவென்று சொல்வது.

Latest Videos

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் ஜடேஜா, பிராவோ, ஷிவம் துபே என மூவரும் 4 கேட்சுகளை கோட்டை விட்டனர், தோனி ஒரு ஸ்டெம்பிங்கை கோட்டைவிட்டார். சான்ட்னர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் அடித்த கேட்சை ஜடேஜா பிடிக்காமல் கோட்டைவிட்டார். மூக்குமேல் ராஜாவாக சென்ற கேட்சை ஜடேஜா எளிதாக பிடிக்காமல் விட்டார், 2-வதாக12-வது ஓவரில் ஷோக்கீனுக்கு ஒரு கேட்சையும் ஜடேஜா நழுவவிட்டார். 

ஷிவம் துபே ஒருகேட்சை நழுவிட்டார். சிஎஸ்கே அணியினர் கேட்சை கோட்டைவிட்டதைப் பார்த்தபோது, களமிறங்கும்போது அனைவரும் கைகளில் விளக்கு எண்ணெயை தடவிக்கொண்டு வந்துவிட்டார்களோ என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். அதிலும் ஜடேஜா 2 கேட்சை நழுவவிட்டதை யாராலும் நம்பமுடியவில்லை.

வயதாகிவிட்டதை தோனி மட்டும்தான் நம்பமறுக்கிறார். 41 வயாதிவிட்டதால் ஸ்டெம்பிங் செய்வதற்கு முதுகை வளைக்க தோனியால் முடியவில்லை, இதனால், சூர்யகுமார் யாதவுக்கு ஒரு ஸ்டெம்பிங்கை தோனி நழுவவிட்டார்.

சிஎஸ்கே அணியின் “சூப்பர்” பீல்டிங்கை ட்வி்ட்டரில் கிண்டல் செய்தும் கேலி செய்தும், வறுத்தெடுத்துவிட்டனர்.

இந்திய அணி வீரர் அமித் மிஸ்ரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஜடேஜா கேட்சை நழுவவிட்டது, தோனி ஸ்டெம்பிங்கை கோட்டைவிட்டது ஆகியவை, பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி பொறுப்புணர்வுடன் கண்ணை திறந்துவைத்து பேட் செய்தது போன்று அரிதானது. இரண்டுமே நடந்தது என்றால் யாராலும் நம்ப முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஸா போக்லே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நான் நினைவில் வைக்கக்கூடிய அளவுக்கு வெறித்தனமான ஆரம்பம் சிஎஸ்கேயிடம் இருந்தது. ஆனால், ஏராளமான தவறுகள், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முகேஷ் சவுத்ரி. தோனி ஸ்டெம்பிங்கை தவறவிட்டார், ஜடேஜா, பிராவோ கேட்சை தவறவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்

நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தில் “ தவறான லைனில் இஷான் கிஷன் ஆடினார், தோனி ஸ்டெம்பிங்கை தவறவிட்டார், ஜடேஜா கேட்சை நழுவவிட்டார்,  ஆட்டத்தின் முதல் இரு ஓவர்களிலும் பல பிரபஞ்ச அதியங்கள் நடந்தன” எனத் தெரிவித்துள்ளார்.

 மற்றொருவர் பதிவிட்ட கருத்தில் “ முகேஷ் விக்கெட் வீழ்த்தினார், தோனி ஸ்டெம்பிங்கை தவறவிட்டார், ஜடேஜா கேட்சை நழுவிட்டார். அடுத்து என்ன, ஆர்சிபி கோப்பையை வெல்லப்போகிறதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

click me!