டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரன் சேஸிங்போது சிஎஸ்கே வீரர் Dugout ல் அசந்து தூங்கிய புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
CSK Vansh Bedi falls asleep in dugout during DC match: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் விளாசினார். பின்பு பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
சிஎஸ்கே அணி படுதோல்வி
இந்த போட்டியில் சிஎஸ்கேவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அதுவும் இறுதிவரை களத்தில் இருந்த விஜய் சங்கரும், மகேந்திர சிங் தோனியும் சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைக்க கொஞ்சம் கூட முயற்சிக்கவில்லை. 54 பந்துகளை சந்தித்த விஜய் சங்கர் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 127 மட்டுமே. 11வது ஓவரில் களம் இறங்கிய தோனி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாலும் 26 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 115 என படுமோசமாக இருந்தது.
அசந்து தூங்கிய சிஎஸ்கே வீரர்
டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே ரன் சேஸிங் செய்து கொண்டிருந்தபோது எப்படியாவது வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் மைதானத்திலும், டிவியிலும் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் சிஎஸ்கே வெற்றி பெற பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இப்படி ரசிகர்களே சீரியஸாக மேட்ச் பார்த்துக் கொண்டிருக்க, சிஎஸ்கே Dugout ல் (சிஎஸ்கே வீரர்கள் உட்காரும் பகுதி) அந்த அணி வீரர் அசந்து தூங்கிய புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
CSK vs PBKS: வேறு வழியில்லை! ஸ்டார் வீரரை நீக்கிய ருத்ராஜ்! சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!
டக்கெவுட்டில் தூங்கிய வான்ஷ் பேடி
அதாவது ரன் சேஸிங்கின்போது தோனியும், விஜய் சங்கரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது டக்கெவுட்டில் (Dugout) இருந்த சிஎஸ்கேவின் இளம் வீரர் வான்ஷ் பேடி, 'அணி தோற்றால் என்ன, ஜெயித்தால் நமக்கென்ன' என்பது போல் தூங்கியுள்ளார். ஜடேஜா உள்ளிட்ட சக சிஎஸ்கே வீரர்கள் சீரியஸாக மேட்ச் பார்க்க, வான்ஷ் பேடி தூங்கும் புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றன.
கமெண்ட்களை தெறிக்க விடும் ரசிகர்கள்
டெல்லி பிரீமியர் லீக்கில் அசத்தியதால் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட 22 வயதான வான்ஷ் பேடி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன ஆவார். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவில்லை. வான்ஷ் பேடி தூங்கியதை வைத்து ரசிகர்கள் சீரியசாகவும், வேடிக்கையாகவும் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது
''அணி தோற்கிறதோ இல்லை ஜெயிக்கிறதோ ஒரு வீரர் அந்த மேட்ச் முழுவதையும் பார்த்து அதில் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு இளம் வீரர், அதுவும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காத வீரர் இப்படி தூங்குவது சரியா? இப்படி இருந்தா ஐபிஎல் கப் இல்லை வெண்கல கிண்ணம் கூட வாங்க முடியாது'' என ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குத்து டான்ஸா ஆடுவார்...
''களத்தின் உள்ளே தோனியும், விஜய் சங்கரும் மிகவும் மந்தமாக தூக்கம் வருவதுபோல் விளையாடி வருகின்றனர். இப்படி விளையாடினால் வான்ஷ் பேடி தூங்காமல் குத்து டான்ஸா ஆடுவார்'' என்று நெட்டிசன்கள் வேடிக்கையாக கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
இனி மும்பையை ஜெயிக்கிறது கஷ்டம்! பழைய பன்னீர்செல்வமாக வந்த பும்ரா! அதே மிரட்டல் வேகம்!