10 நாளில் சரியாயிடுச்சா..? தலையெடுக்கும் தாகூர் விவகாரம்.. வெடித்தது சர்ச்சை

By karthikeyan VFirst Published Oct 14, 2018, 11:16 AM IST
Highlights

ஷர்துல் தாகூருக்கு உடற்தகுதி சான்று வழங்கப்பட்ட விவகாரம் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. 
 

ஷர்துல் தாகூருக்கு உடற்தகுதி சான்று வழங்கப்பட்ட விவகாரம் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. 

ஹைதராபாத்தில் நடந்துவரும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷர்துல் தாகூர், 10 பந்துகள் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். 10 பந்துகள் கூட வீச முடியாத உடற்தகுதியுடன் இருந்த தாகூருக்கு உடற்தகுதி சான்று வழங்கியது எப்படி? என்ற சர்ச்சை வெடித்துள்ளது. 

அடுத்தடுத்த 2 சர்வதேச போட்டிகளில் ஷர்துல் தாக்கூர் காயமடைந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த செப்டம்பர் 18ம் தேதி ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில், இதே வலது இடுப்பு மற்றும் வயிறு, தொடை இடைப்பட்ட பகுதியில் காயத்தினால் அவதிப்பட்டார்.

ஆனால் 10 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 28ம் தேதி அவர் விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணிக்காக ஆடினார். ஆகவே 10 நாட்களில் அவர் குணமடைந்து விட்டதாக எப்படி சான்றிதழ் அளிக்கப்பட்டது, யார் இதற்குக் காரணம் என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. 

"Groin Injury" என்பது களத்தில் ஏற்படும் காயங்கள் அல்ல; அது உடற்தகுதி குறித்த பிரச்னை. அப்படியிருக்கையில் தாகூர் எப்படி ஃபிட்னெஸ் சர்டிபிகேட் பெற்றார்? அதுவும் 10 நாட்களுக்குள் பெற்றிருப்பது விசித்திரமாக இருக்கிறது. என்று என்.சி.ஏவுக்கு நெருக்கமான பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சிஓஓ துபான் கோஷ் மற்றும் ஆஷிஷ் கவுஷிக் ஆகியோர்தான் என்சிஏவில் வீரர்களின் மறுவாழ்வு பிரச்னைகளை பார்ப்பவர்கள். இவர்கள்தான் இதற்குப் பதில் கூற வேண்டும். பணிச்சுமை பற்றி பொறுப்புடன் பேசி வருவதாக கூறும் நேரத்தில் பணிச்சுமையை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட பவுலரே மற்ற பவுலர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்திச் சென்றது எப்படி? நான் தவறில்லை எனில், என்.சி.ஏ செயல்பாடு குறித்து பொருளாளர் அனிருத் சவுத்ரி சிஓஏ அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார், ஆனால் பதில் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. எனவே இந்த என்.சி.ஏ. விவகாரம் தற்போது சிஓஏ கைக்குச் சென்று விட்டது என்று அவர் கூறியுள்ளார். 

ஏற்கனவே சஹா, புவனேஷ்வர் குமார், அஷ்வின் ஆகிய வீரர்களை காயங்களுடன் ஆடவைத்தது குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது ஷர்துல் தாகூர் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 
 

click me!