நீங்க என்ன சொல்றது? நான் என்ன கேட்குறது? கவாஸ்கரை கதறவிட்ட தோனி

By karthikeyan VFirst Published Oct 14, 2018, 10:03 AM IST
Highlights

விஜய் ஹசாரே டிராபியில் ஜார்கண்ட் அணிக்காக ஆடுவதில்லை என்று தோனி முடிவு செய்துள்ளார். 
 

விஜய் ஹசாரே டிராபியில் ஜார்கண்ட் அணிக்காக ஆடுவதில்லை என்று தோனி முடிவு செய்துள்ளார். 

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் நடந்துவருகிறது. லீக் சுற்றின் முடிவில் மும்பை, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, ஹைதராபாத், பீகார், ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. பெங்களூருவில் இன்று காலிறுதி போட்டிகள் தொடங்குகின்றன.

இன்று 2 காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. ஒரு போட்டியில் மும்பை - பீகார் அணிகள் மோதுகின்றன. மற்றொரு காலிறுதி போட்டியில் டெல்லி-ஹரியானா அணிகள் மோதுகின்றன.  ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்காத மற்றும் இந்திய அணியில் ஆட நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காத இந்திய வீரர்கள் விஜய் ஹசாரேவில் ஆடிவருகின்றனர். ரெய்னா, காம்பீர், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் விஜய் ஹசாரேவில் ஆடிவருகின்றனர். 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகும் விதமாக ரோஹித் சர்மா, மும்பை அணிக்காக ஆடுகிறார். இன்று பீகாருக்கு எதிரான காலிறுதி போட்டியில் ரோஹித் சர்மா மும்பை அணியில் ஆடுகிறார். 

ஃபார்மில் இல்லாத தோனி, மீண்டும் ஃபார்முக்கு வரும் விதமாக விஜய் ஹசாரேவில் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. பேட்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடாததால், நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் மற்றும் விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் போட்டிகளில் ஆடுவது, தோனிக்கு பேட்டிங்கில் டச்சிலேயே இருக்கும் உதவும் என்பதால், இந்த போட்டிகளில் தோனி ஆட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார். 

ஆனால், தோனி விஜய் ஹசாரேவில் ஆடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜார்கண்ட் அணியின் பயிற்சியாளர், ஜார்கண்ட் அணி இதுவரை நன்றாக ஆடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. எனவே இந்த நேரத்தில் அணியில் இணைந்து அணியின் நிலைத்தன்மையை சீர்குலைக்க வேண்டாம் என்று கருதி, தோனி ஜார்கண்ட் அணியில் ஆட மறுத்துவிட்டார் என்று கூறியுள்ளார். 

விஜய் ஹசாரே போன்ற உள்நாட்டு தொடர்களில் ஆடி, தோனி டச்சிலேயே இருப்பதன்மூலம் சிறப்பாக பேட்டிங் ஆட முடியும் என்பதால், இதுபோன்ற தொடர்களில் ஆட வேண்டும் என்பது கவாஸ்கரின் கருத்து. ஆனால் தோனியின் முடிவோ, ஜார்கண்ட் அணியின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தோனி, விஜய் ஹசாரேவில் ஆட தனக்கு விருப்பமில்லை என்பதை, அணியின் நலன் கருதி ஆட விரும்பவில்லை என்று கூறி நழுவியிருக்கலாம்.
 

click me!