கவாஸ்கர், கங்குலி, டிராவிட்டுடன் இணைந்த பிரித்வி ஷா!! அட நம்ம சச்சின் கூட இந்த சம்பவம் செஞ்சது இல்லங்க

By karthikeyan VFirst Published Oct 13, 2018, 5:34 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அபாரமாக ஆடி சதமடித்தார் பிரித்வி ஷா. அறிமுக போட்டியில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை குவித்த பிரித்வி ஷா, இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக ஆடினார். 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அபாரமாக ஆடி சதமடித்தார் பிரித்வி ஷா. அறிமுக போட்டியில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை குவித்த பிரித்வி ஷா, இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக ஆடினார். 

ஹைதராபாத்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று 311 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி முதல் இன்னிங்ஸை முடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, இரண்டாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானேவும் ரிஷப் பண்ட்டும் களத்தில் உள்ளனர். ரஹானே 75 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 85 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி சில நிமிடங்களிலேயே தொடக்க வீரர் ராகுல் 4 ரன்களில் வெளியேறினார். கடந்த போட்டியில் டக் அவுட்டான ராகுல், இந்த போட்டியில் நிதானமாக தொடங்கினார். இந்த போட்டியிலாவது சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் 4 ரன்களில் வெளியேறினார்.

ஆனால் கடந்த போட்டியில் அபாரமாக ஆடிய பிரித்வி ஷா, இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை சிதறடித்த பிரித்வி பவுண்டரிகளாக விளாசினார். அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த பிரித்வி ஷா, 53 பந்துகளில் 70 ரன்களை குவித்த நிலையில், வாரிகன் வீசிய மிகவும் சாதாரணமான பந்தில் அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். அதனால் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

பிரித்வி ஷா அவசரப்பட்டு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். எனினும் முதல் இரண்டு இன்னிங்ஸ்களில் அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்துள்ளார் பிரித்வி ஷா. 

கடந்த போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டுமே ஆடியது. அந்த இன்னிங்ஸில் பிரித்வி ஷா 134 ரன்களை குவித்திருந்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது முதல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் கவாஸ்கர், கங்குலி, டிராவிட் போன்ற ஜாம்பவான்களுடன் பிரித்வி இணைந்துள்ளார். 

பிரித்வி ஷாவிற்கு முன்னதாக திலாவர் ஹூசைன், கிரிபால் சிங், சுனில் கவாஸ்கர், கங்குலி, டிராவிட், ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது முதல் இரண்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அரைசதம் கடந்துள்ளனர். தற்போது இந்த பட்டியலில் பிரித்வி ஷாவும் இணைந்துள்ளார். பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள சச்சின் டெண்டுல்கர் இந்த சம்பவத்தை செய்ததில்லை. 
 

click me!