அவுட்டே இல்லைனு அப்பட்டமா தெரியுது.. நான் ஏன் போகணும்..? அடம்பிடித்த நியூசி., வீரர்.. அனுப்பிவைத்த அம்பயர்கள் வீடியோ

By karthikeyan VFirst Published Feb 8, 2019, 3:52 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மிட்செலுக்கு அவுட்டே இல்லாத எல்பிடபிள்யூ-விற்கு அவுட் கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டார். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மிட்செலுக்கு அவுட்டே இல்லாத எல்பிடபிள்யூ-விற்கு அவுட் கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டார். 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 158 ரன்களை எடுத்தது. 159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட் - தோனி ஜோடி பொறுப்பாக ஆடி இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தது. 19வது ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் மிட்செலுக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டது. மிட்செலும் வில்லியம்சனும் ஆடிக்கொண்டிருந்தபோது, குருணல் பாண்டியாவின் பந்தில் மிட்செலுக்கு எல்பிடபிள்யூ வழங்கப்பட்டது. அந்த பந்து கால்காப்பில் படுவதற்கு முன்பாக பேட்டில் பட்டது. அதனால் அவுட்டில்லை என்பதில் உறுதியாக இருந்த மிட்செல், சற்றும் யோசிக்காமல் ரிவியூ கேட்டார். ரிவியூவில் பந்து கால்காப்பில் படுவதற்கு முன்பாக இன்சைட் எட்ஜானது தெரிந்தது. எனினும் மூன்றாவது அம்பயர் அவுட் என்றே கூறினார். 

pic.twitter.com/7mU7ZMIbsz

— Baahubali (@bahubalikabadla)

இதனால் கேப்டன் வில்லியம்சனும் மிட்செலும் அதிர்ச்சியடைந்தனர். இருவரும் கள நடுவர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினர். கள நடுவர்கள் விவாதித்துக்கொண்டிருந்தபோது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அவர்களுடன் ஆலோசித்தார். பின்னர் களநடுவர்கள் மீண்டும் மூன்றாவது அம்பயரிடம் உறுதி செய்து மிட்செலை அவுட் என்றுகூறி அனுப்பி வைத்தனர். அவுட்டே இல்லாததற்கு மூன்று அம்பயர்களும் சேர்ந்து அவுட் கொடுத்து மிட்செலை அனுப்பிவைத்தனர். 

pic.twitter.com/IZ27odKzz8

— Baahubali (@bahubalikabadla)
click me!