காமன்வெத்தில் இந்தியாவிற்கு 3வது தங்கம் வென்று கொடுத்தார் பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி

Published : Aug 01, 2022, 08:29 AM IST
காமன்வெத்தில் இந்தியாவிற்கு 3வது தங்கம் வென்று கொடுத்தார் பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி

சுருக்கம்

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி இந்தியாவிற்கு 3வது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார்.  

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. காமன்வெல்த்தின் அனைத்து போட்டிகளிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.

குறிப்பாக பளுதூக்குதலில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்துவருகின்றனர். மகளிர்  49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானுவும், 67 கிலோ எடைப்பிரிவில் ஜெரெமியும் இந்தியாவிற்கு தங்கத்தை வென்று கொடுத்தனர். 

இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 2வது தங்கம்.! பளுதூக்குதலில் இந்தியாவின் ஜெரெமி தங்கம் வென்றார்

பளுதூக்குதல் வீரர் சங்கேதர் சர்கார் மற்றும் பளுதூக்குதல் வீராங்கனை பிந்தியாராணி தேவி ஆகிய இருவரும் வெள்ளி பதக்கம் வென்றனர். குருராஜா வெண்கலம் வென்றார்.

இந்நிலையில், பளுதூக்குதல் ஆடவர் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி ஸ்னாட்ச் பிரிவில் 143 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க் பிரிவில் 170 என மொத்தமாக 313 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். இது இந்தியாவிற்கு இந்த காமன்வெல்த்தில் 3வது தங்கம் ஆகும். 

இதையும் படிங்க - TNPL 2022: ஃபைனலில் அடித்து ஆடிய மழை..! கோப்பையை பகிர்ந்துகொண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ்

மலேசியாவின் ஹிதாயத் முகமது 303 கிலோ எடை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். கனடாவின் டார்சினி வெண்கலம் வென்றார்.

இந்தியா இந்த காமன்வெல்த்தில் இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!