Commonwealth Games 2022: பர்மிங்காமில் இன்று கோலாகல தொடக்க விழா..! எந்த சேனலில் எத்தனை மணிக்கு பார்க்கலாம்..?

By karthikeyan VFirst Published Jul 28, 2022, 2:09 PM IST
Highlights

இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று 22வது காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழா கோலாகலமாக நடக்கவுள்ளது.
 

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடக்கிறது. 

காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகளிலிருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பலவேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

இந்தியாவிலிருந்து 215 வீரர்கள், வீராங்கனைகள் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் பங்கேற்று ஆடவுள்ளனர்.  பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பாக்ஸிங் வீராங்கனை லவ்லினா பார்கொஹைன், பளுதூக்கும் வீரர் பஜ்ரங் புனியா, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் இந்தியாவிற்கு பதக்கங்களை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள் 2022: முதல் நாளில் இந்தியாவிற்கான போட்டிகள், எந்தெந்த வீரர்கள் ஆடுகின்றனர்? முழு விவரம்

இந்தியாவிற்கு கண்டிப்பாக பதக்கத்தை வென்று கொடுக்க வாய்ப்பிருந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. அதனால் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் இழப்பு. 

22வது காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழா இங்கிலாந்தின் பர்மிங்காமில் இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. பர்மிங்காமில் உள்ள அலெக்ஸாண்டர் ஸ்டேடியத்தில் இந்த விழா நடக்கவுள்ளது. இதன் நேரலையை Sony Liv சேனலில் பார்க்கலாம். காமன்வெல்த் போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். 

இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள் 2022: எந்தெந்த நாட்களில் என்னென்ன போட்டிகள்..? முழு போட்டி அட்டவணை

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மகனும் இளவரசருமான சார்லஸ் தொடக்க விழாவில் கலந்துகொண்டு காமன்வெல்த் போட்டிகளை தொடங்கிவைக்கவுள்ளார். தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஏந்தவுள்ளார். இந்த தொடக்க விழாவை காண 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழா நடக்கவுள்ளது.
 

click me!