நடுவர் முகத்தை உடைத்த இந்திய மல்யுத்த வீரர்: வாழ்நாள் தடைவிதித்து நடவடிக்கை

By Pothy RajFirst Published May 19, 2022, 3:09 PM IST
Highlights

காமென்வெலத் விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சியில் மல்யுத்தப் போட்டியின்போது ரெப்ரியை முகத்தில் குத்தி உடைத்த இந்திய மல்யுத்த வீரர் சத்தேந்தர் மாலிக்கிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 Commonwealth Games 2022: காமென்வெலத் விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சியில் மல்யுத்தப் போட்டியின்போது ரெப்ரியை முகத்தில் குத்தி உடைத்த இந்திய மல்யுத்த வீரர் சத்தேந்தர் மாலிக்கிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

125கிலோ எடைப்பிரிவில் பயிற்சிப் போட்டியில் பங்கேற்ற சத்தேந்தர் மாலிக் போட்டியில் தோல்வி அடைந்த விரக்தியில் இந்த செயலைச் செய்துள்ளார். 

காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகளுக்கு வீரர்கள் தயாராகி வருகிறார்கள். அதற்கான பயிற்சி ஒவ்வொரு பிரிவிலும் நடந்து வருகிறது. இதில் 125 கிலோ எடைப் பிரிவில் ஆடவருக்கான மல்யுத்தப் போட்டிக்கு வீரர்கள் தயாராகி வருகிறார்கள். 

இதில் விமானப்படை வீரர் சத்தேந்தர் மாலிக்கிற்கும், மோகித் என்பவருக்கும் இடையே நேற்றுமுன்தினம் பயி்ற்சி ஆட்டம் நடந்து. ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் சத்தேந்தர் மாலிக் முன்னணியில் இருந்தார், ஆட்டம் முடிய 18 வினாடிகளே இருந்தன. அப்போது மோகித் டேக்டவுன் மூவ் எடுத்து சத்தேந்தரை கோட்டுக்கு வெளியே தள்ளினார். 

டேக்ட்வுன் மூவ் எடுத்த மோகித்துக்கு ரெப்ரி வீரேந்தர் மாலிக் 2 புள்ளிகள் வழங்கவில்லை, ஆனால், புஷ்அவுட் செய்தமைக்காக ஒரு புள்ளியை மோகித்துக்கு வழங்கினார். இந்த முடிவால் அதிருப்தி அடைந்த சத்தேந்திர மாலிக், மூத்த ரெப்ரி ஜக்பிர் சிங்கிடம் சென்று நடுவர் பாரபட்சத்துடன் நடக்கிறார், டிவி ரீப்ளேயில் பார்த்து புள்ளி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

 டிவி ரீப்ளேயில் பார்த்த மூத்த ரெப்ரி ஜக்பிர் சிங், மோகித்துக்கு 3 புள்ளிகள் வழங்கினார். இதனால் மோகித், சத்தேந்தர் மாலிக் இருவரும் 3-3 என்று சமநிலைக்கு வந்தனர். அதுமட்டுமல்லாமல் கடைசிக் கட்டத்தில் புள்ளி பெற்றமைக்காக மோகித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, சத்தேந்திர மாலிக் ஆத்திரமடைந்தார். மற்றொரு தளத்தில்  57 கிலோ எடைப்பிரிவில் வீரர்கள் ரவி தய்யா, அமான் மோதிய ஆட்டத்துக்கு ரெப்பி ஜக்பிர் சிங் நடுவராக செயல்பட்டார்.

அங்கு சென்ற சத்தேந்திர மாலிக், நடுவர் ஜக்பிர் சிங்கை இழுத்து கன்னத்தில் அறை விட்டார் இதனால் ஜக்பிர் சிங் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.அதன்பின் அவரின் முகத்தில் குத்தி காயப்படுத்தினார்.  இந்த சம்பவத்தைப் பார்த்த ரசிகர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து, அங்கிருந்த அலுவலர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அதிகாரிகள்  சேர்ந்து சத்தேந்திர மாலிக்கை அங்கிருந்து அனுப்பினர். இவை அனைத்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் முன்னிலையில்நடந்தது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் துணைச் செயலாளர் வினோத் தோமர் கூறுகையில்  “ சத்தேந்தர் செயலுக்கு அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப் போகிறோம். இந்த முடிவை விரைவில் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்எடுப்பார். ரெப்ரியையும்அழைத்து விளக்கம் கோரப்படும். மோகித்துக்கு ஏன் புள்ளிகள் வழங்கப்படவில்லை, சூழல் ஏன் கைமீறியது என்றுவிளக்கம் கோரப்படும்”எ னத் தெரிவித்தார்
 

click me!