நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழாவில் 61 தங்கம் வென்று முதலிடம் பிடித்த சென்னை மாவட்ட அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிராபி வழங்கி கௌரவித்துள்ளார்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 2023ம் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023ம் மாதம் முடிய நடைபெற்றது.
ஐபிஎல் மினி ஏல தொகையில் மாற்றம் கொண்டு வரும் பிசிசிஐ: கொண்டாட்டத்தில் சிஎஸ்கே!
இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் மூன்று இலட்சத்து எழுபது ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து முதலமைச்சர் கோப்பைக்கான டிராபி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் கடந்த ஜுலை 01ஆம் தேதி முதல் ஜுலை மாதம் 25ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலிருந்தும் கிட்டத்தட்ட 370000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
ரூ.43 ஆயிரம் சம்பளத்திற்கு தோனிக்கு வந்த வேலை வாய்ப்பு? எந்த கம்பெனி தெரியுமா?
கிரிக்கெட், பேட்மிண்டன், சிலம்பம், டேபிள் டென்னிஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், நீச்சல் போட்டி, ஹாக்கி போட்டி, பீச் வாலிபால் போட்டி என்று ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முதல்வர், மகனான உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். விளையாட்டு பிள்ளையாக இருக்கிறார் என்று வளர்ந்த பிள்ளையை பார்த்து சில பெற்றோர் நினைப்பது உண்டு. விளையாட்டு துறை அமைச்சராக நம் பிள்ளை சிறப்பாக செயல்படுகிறார் என்று பெற்றவனை மகிழ்விக்க கூடியவராக உதயநிதி இருக்கிறார். விளையாட்டை பார்ப்பவர்களுக்கு கலிப்பாக இருக்கும். விளையாட்டை நடத்துபவர்களும், அந்த போட்டியில் கலந்து கொள்பவர்களும் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இந்த நிகழ்வை மிக பொறுப்பாக நடத்தியிருக்கும் விளையாட்டுத் துறையின் செயலர் மற்றும் உறுப்பினர் செயலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி. செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை நினைவு கூர்ந்து பேசினார். இந்த நிறைவு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாநில அளவில் நடந்த போட்டிகளில் சென்னை மாவட்ட அணி 61 தங்க பதக்கங்கள் வென்று சென்னை மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. இந்த அணிக்கு முதலமைச்சர் கோப்பை வழங்கப்பட்டது. இதையடுத்து, 18 தங்கப் பதக்கங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட அணி 2ஆவது இடம் பிடித்தது. 15 தங்கப் பதக்கங்களுடன் கோயம்புத்தூர் மாவட்ட அணி 3ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி பஞ்சாப் மாநிலம் அமிதர்சரஸில் நடந்த 27ஆவது தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி வெற்றி பெற்ற நிலையில், அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.60 லட்சத்திற்கான காசோலை இன்று வழங்கப்பட்டது. தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த மாதம் 28 ஆம் தேதி நடந்தது. அப்போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாடு கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்னதாக தமிழ்நாடு மகளிர் அணி கடந்த 2017-2018 ஆம் ஆண்டு வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
: "களம் நமதே" முதலமைச்சர் கோப்பை - 2023 நிறைவு விழாப் பேருரைhttps://t.co/lbJbf0eh7d
— M.K.Stalin (@mkstalin)