ஃபெட் கோப்பை டென்னிஸ்: விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது சீனா...

Asianet News Tamil  
Published : Feb 08, 2018, 11:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
ஃபெட் கோப்பை டென்னிஸ்: விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது சீனா...

சுருக்கம்

China defeated india in Fed up in tennis

ஃபெட் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில், 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது சீனா.

ஃபெட் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்று டெல்லி ஆர்.கே.கன்னா டென்னிஸ் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில், இந்திய வீராங்கனை கர்மான் தன்டி கெüர் 2-6, 2-6 நேர் செட் கணக்கில் தரவரிசையில் 125-வது இடத்தில் உள்ள யஃபான் வாங்கிடம் தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து, மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் அங்கிதா, சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 120-வது இடத்தில் உள்ள வீராங்கனையான லின் ஸாவை சந்தித்தார்.

கடந்தாண்டு மே மாதம் லுவான் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் லின் ஸாவிடம் தோல்வி கண்டிருந்தார் அங்கிதா. அதற்கு தகுந்த இப்போது பதிலடி கொடுத்தார். இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லின் ஸாவை வீழ்த்தினார் அங்கிதா.

அதேபோன்று, மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா - பிரார்தனா தாம்ப்ரே இணை, தர்வதேச தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 31-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் - ஜயாக்ஸன் யாங் இணையிடம்  2-6, 6-7 (1) என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இதனையடுத்து, சீனா 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?