கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்வோம் - முகமதுல்லா ரியாத் நம்பிக்கை...

Asianet News Tamil  
Published : Feb 08, 2018, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்வோம் - முகமதுல்லா ரியாத் நம்பிக்கை...

சுருக்கம்

We will win the last Test series and win the series - Mohammad Riyadh ...

இலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி போட்டியில் வெற்றிப் பெற்று தொடரை வெல்வோம் என்று வங்கதேச தற்காலிக கேப்டன் முகமதுல்லா ரியாத் தெரிவித்தார்.

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமன் ஆனது. டாக்காவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுத் தொடங்குகிறது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முகமதுல்லா ரியாத், "முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினோம். எனினும், ஆட்டம் சமன் ஆகிவிட்டது.

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்வோம். சொந்த மண் என்பதால் எங்கள் வீரர்கள் மேலும் சிறப்பாக விளையாடுவார்கள்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமல், "வங்கதேச அணியினரை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

டாக்கா மைதானம் வறண்டு காட்சி அளிக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆட்டம் சமன் ஆக வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இந்தப் போட்டி சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். இலங்கை அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். எந்தவிதமான சூழலையும் எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்று அவர்  தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?