
2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டி வரை இந்தியக் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீஃபன் கான்ஸ்டன்டைன் நீடிக்கிறார்.
2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டி வரை இந்தியக் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீஃபன் கான்ஸ்டன்டைன் நீட்டிக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தொழில்நுட்பக் குழு முடிவு செய்துள்ளது.
முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஷியாம் தபா தலைமையில் மும்பையில் நேற்று நடைபெற்ற அகில இந்திய கால்பந்து தொழில்நுட்ப குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிந்துரை இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். என்றும், அந்தக் குழுவின் ஒப்புதலுக்கு பிறகு அவரது பணிக் காலம் நீட்டிக்கப்படும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி இதுவரை ஒன்றில் கூட தோல்வி அடையவில்லை. 11 ஆட்டங்களில் வெற்றியும், 2 ஆட்டங்கள் சமனும் ஆனது என்பது கூடுதல் தகவல்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணி, சர்வதேச கால்பந்து தரவரிசையில் 100-வது இடத்துக்கு முன்னேறியது. ஜூலை மாதம் 96-வது இடத்தில் இருந்தது. தற்போது 102-வது இடத்தில் உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.