Chessable Masters :chessable மாஸ்டர்ஸ் செஸ் : தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு 2வது இடம்: டிங் லிரன் சாம்பியன்

By Pothy RajFirst Published May 27, 2022, 1:35 PM IST
Highlights

Chessable Masters 2022 :மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பெற்றார்.

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பெற்றார்.

இறுதிப்போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான டிங் லிரனிடம் டை பிரேக்கர் முறையில் நடந்த ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.

லீக் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சனையும், காலிறுதியில் சீன வீரர் வீ ஒயையும் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்..அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. அதுமட்டுமல்லாமல் மெல்ட்வாட்டர் சாம்பியன் செஸ் போட்டிக்கு இறுதிப்போட்டிவரை முன்னேறிய முதல் இ்ந்திய வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.

இந்நிலையில்  செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலகின் 2ம் நிலை வீரரான டிங் லிரனை எதிர்கொண்டார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. 

முதல் கேமை பிரக்ஞானந்தா இழந்தபோதிலும் 2-வது கேமில் வெற்றி பெற்று டிங் லிரனுக்கு நெருக்கடி கொடுத்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் 3வது கேம் இருவருக்கும் இடையே கடும் போட்டியாக அமைந்தது. இறுதியில் டைபிரேக்கர் முறையில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார் டிங் லிரன்

சென்னையைச் சேர்ந்தவரும் இந்திய கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தா முதல் செட்டை 1.5-2.5 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். ஆனால், 2-வது செட்டில் 2.5-1.5 என்று டிங் லிரனுக்கு அதிர்ச்சி அளித்து 79 நகர்த்தல்களில் வென்றார். 3-வது செட் இருவருக்கும் இடையே கடும் போட்டியாக இருந்து 106 நகர்த்தல்கள் வரை சென்றது. இறுதியில் டைபிரேக்கரில் சீன வீரர் டிங் லிரன் வெற்றியாளராகினார்.

தமிழக வீரர் பிரக்ஞானந்தா ரமேஷ்பாபுவின் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரக்ஞானந்தா மற்றும் கொசுக்களை வென்றதாக டிங்கிற்கு வாழ்த்துகள். பிரக்ஞாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அனைத்து சூழல்களிலும் தனது போராட்டத்தை வெளிப்படுத்தியது பெருமைக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்

அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. அதுமட்டுமல்லாமல் மெல்ட்வாட்டர் சாம்பியன் செஸ் போட்டிக்கு இறுதிப்போட்டிவரை முன்னேறிய முதல் இ்ந்திய வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார். 

click me!