Chess Olympiad Closing Ceremony LIVE : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - நேரலை !

Published : Aug 09, 2022, 07:15 PM ISTUpdated : Aug 09, 2022, 07:27 PM IST
Chess Olympiad Closing Ceremony LIVE : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - நேரலை !

சுருக்கம்

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு பெற்றன. கடந்த 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். 29ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் செஸ் போட்டிகள் நடைபெற தொடங்கி நடைபெற்று வந்தன.187 பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார்  2000 வீரர்கள்  போட்டியில் பங்கேற்று விளையாடி வந்தனர்.

11 சுற்றுகளாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA: பிரசித், குல்தீப் மாயாஜாலம்.. 270 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா..! தொடரை வெல்லும் இந்தியா..?
இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!