செஸ் ஒலிம்பியாட்: 3வது சுற்றில் இந்தியாவின் ரோனக் சத்வானி, நந்திதா வெற்றி

Published : Jul 31, 2022, 06:33 PM IST
செஸ் ஒலிம்பியாட்: 3வது சுற்றில் இந்தியாவின் ரோனக் சத்வானி, நந்திதா வெற்றி

சுருக்கம்

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 3வது சுற்றில் இந்தியாவின் ரோனக் சத்வானி மற்றும் நந்திதா ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.  

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. முதல் 2 சுற்றுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 3வது நாளான இன்று 3வது சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. 3வது சுற்றில் ரோனக் சத்வானி மற்றும் நந்திதா வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய மகளிர்  சி அணி ஆஸ்திரியாவை எதிர்கொண்டு ஆடிவருகிறது. சி அணியில் இடம்பெற்றுள்ள நந்திதாவை எதிர்கொண்டு ஆடவேண்டிய ஆஸ்திரிய வீராங்கனை சைரா என்ற உடல்நலக்குறைவால் இந்த போட்டியில் ஆடவில்லை. அதனால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய ஆடவர் பி அணி சுவிட்சர்லாந்து அணியை எதிர்த்து ஆடிவருகிறது. பி அணியில் இடம்பெற்றிருந்த ரோனக் சத்வானி, சுவிட்சர்லாந்து வீரர் ஃபேபியனை 38வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!