
இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று மாலை நடைபெறும் ஒரு போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
சென்னை அணி பேட்டிங்கில் சிறந்து விளங்கினாலும் பவுலிங்கில் அதிகமாக சொதப்புகின்றனர். சிறப்பாக பந்து வீசிவந்த சாஹர், காயம் காரணமாக இரண்டு வாரங்களுக்கு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஷர்துல் தாகூர், பிராவோ, வாட்சன் ஆகியோரின் பந்துவீச்சு சொல்லும்படியாக இல்லை. முந்தைய போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நிகிடி, கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ரன்களை வாரிவழங்கினார்.
ஹர்பஜன் சிங் மட்டும்தான் அனைத்து போட்டிகளிலும் ஓரளவிற்கு எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்துகிறார். பவுலிங்கில் மிகவும் மோசமாக இருக்கிறது சென்னை அணி. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசும்போது கூட தோனி இதை குறிப்பிட்டார்.
இந்நிலையில், இன்று பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதுகிறது. ஏற்கனவே சென்னை அணியின் பவுலிங் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில் ஆடாத டிவில்லியர்ஸ் இந்த போட்டியில் பெங்களூரு அணியில் ஆடுகிறார். கடந்த முறை இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டியில், சென்னை அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பறக்கவிட்ட டிவில்லியர்ஸ், 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.
டிவில்லியர்ஸ் இன்றைய போட்டியில் ஆடுவதை பெங்களூரு அணியின் பயிற்சியாளர் வெட்டோரி உறுதி செய்துள்ளார். கடந்த போட்டியில் டிவில்லியர்ஸின் அதிரடியால் பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்தும், தோனியை களத்தில் நிலைக்கவிட்டதால், இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடி வெற்றியை பறித்துவிட்டார்.
ஆனால் இன்றும் அதுபோல நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே மோசமான பந்துவீச்சுடன் களமிறங்கும் சென்னை அணிக்கு, இன்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் களமிறங்குவது கூடுதல் சோதனையாகவே இருக்கும். ஆனாலும் வியூகங்களால் டிவில்லியர்ஸை வீழ்த்தி, பெங்களூருவுக்கு எதிரான மற்றுமொரு வெற்றிக்கனியை சென்னை ருசிக்குமா? பார்ப்போம்..
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.