சென்னை சூப்பர் கிங்ஸில் ஹர்பஜன் சிங்!! யுவராஜை மதிக்காத ஹைதராபாத் - ஐபிஎல் அதிரடிகள்

First Published Jan 27, 2018, 11:38 AM IST
Highlights
chennai super kings got harbhajan singh for this IPL


11வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்று ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஷிகர் தவனை 5 கோடியே 40 லட்சத்துக்கு பஞ்சாப் அணி எடுத்தது. ஆனால் ஷிகர் தவனை ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி ஹைதராபாத் அணி தக்கவைத்தது.

சென்னை அணியின் செல்ல பிள்ளையாக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஷ்வினை சென்னை அணி கழட்டிவிட்டது. இதையடுத்து அஷ்வினை எடுப்பதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், 7 கோடியே 60 லட்சத்துக்கு பஞ்சாப் அணி எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவருமான டுபிளெசிஸை பஞ்சாப் அணி 1 கோடியே 60 லட்சத்துக்கு எடுத்தது. அவரை ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி சென்னை அணி, அதே விலைக்கு தக்கவைத்தது.

அதேபோல, வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான டிவைன் பிராவோவையும் ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி 6 கோடியே 40 லட்சத்துக்கு தக்கவைத்துக்கொண்டது. சுழல் ஜாம்பவான் ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி எடுத்தது. 

அஜிங்கியா ரஹானேவை 4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கடும் போட்டியின் முடிவில் 9 கோடியே 40 லட்சத்துக்கு கொல்கத்தா அணி எடுத்தது.

ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை 9 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை ஹைதராபாத் அணி 3 கோடி ரூபாய்க்கு எடுத்தது.

யுவராஜ் சிங்கை அடிப்படை விலையான 2 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. ஹைதராபாத் அணியில் இருந்த யுவராஜ் சிங்கை ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி 2 கோடி கொடுத்து கூட தக்கவைக்க அந்த அணி தயாராக இல்லை. இதையடுத்து யுவராஜ் சிங் இந்த முறை பஞ்சாப் அணிக்கு விளையாடுகிறார்.
 

click me!