
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை. அதிரடி வீரரான கிறிஸ் கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை.
11வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்று ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஷிகர் தவனை 5 கோடியே 40 லட்சத்துக்கு பஞ்சாப் அணி எடுத்தது. ஆனால் ஷிகர் தவனை ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி ஹைதராபாத் அணி தக்கவைத்தது.
சென்னை அணியின் செல்ல பிள்ளையாக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஷ்வினை சென்னை அணி கழட்டிவிட்டது. இதையடுத்து அஷ்வினை எடுப்பதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், 7 கோடியே 60 லட்சத்துக்கு பஞ்சாப் அணி எடுத்தது.
இதையடுத்து மும்பை அணியில் விளையாடிய போலார்டு ஏலம் விடப்பட்டார். கீரன் போலார்டை 5 கோடியே 40 லட்சத்துக்கு டெல்லி அணி எடுத்தது. ஆனால், அவர் ஏற்கனவே மும்பை அணியில் இருப்பதால், ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி அதே விலைக்கு மும்பை அணி எடுத்தது.
இதையடுத்து ஏலம் விடப்பட்ட கிறிஸ் கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை. அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், தற்போது ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், கடந்த சில சீசன்களில் எதிர்பார்த்த அளவிற்கு கெய்ல் விளையாடவில்லை. எனவே கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை.
கடந்த முறை 14 கோடியே 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை இந்தமுறை 12 கோடியே 50 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. இதுவரை ஏலம் விடப்பட்ட வீரர்களிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் பென் ஸ்டோக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.