
சென்னையில் கடந்த ஒருவாரமாக நடந்த ஏ.டி.பி.அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன்டென்னிஸ் போட்டியின் 2017ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர்ரோபர்ட்டோ பாடிஸ்டா அகுட் கைப்பற்றினார்.
தெற்கு ஆசியாவின் ஒரே ஏ.டி.பி. அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு அரங்கில் கடந்த ஒருவாரமாக நடந்து வந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில்மெட்வெத்தேவை எதிர்கொண்டார் ஸ்பெயின் வீரர் ரோபர்ட்டோ பாடிஸ்டா அகுட்.
ஒருதரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மெட்வத்தேவ்வை 6-3, 6-4 என்றேநர்செட்களில் எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ரோபர்ட்டோ தட்டிச் சென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் நடந்தது.
இதில் ரஷிய வீரர் மெத்மதேவ் முதல் முதலாக ஏ.டி.பி. இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளார். கோப்பையை வென்ற அகுட் 2-வது முறையாக சென்னைஓபனில் பங்கேற்று, மகுடம்சூடியுள்ளார். இதற்கு முன், கடந்த 2013ம் ஆண்டு பங்கேற்று இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.