இங்கிலாந்தை வீழ்த்த இந்தியாவின் பலே வியூகம்!! பெங்களூருவில் செஞ்ச மாதிரி ஒரு சம்பவத்துக்கு தயாரான சாஹல்

First Published Jul 3, 2018, 11:38 AM IST
Highlights
chahal has new tricks to beat england


இங்கிலாந்துக்கு எதிராக தானும் கோலியும் விவாதித்து சில வியூகங்களை வகுத்துள்ளதாக ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. முதல் டி 20 போட்டி இன்று தொடங்குகிறது. 

இங்கிலாந்து தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கிய பங்காற்றுவார்கள் என கேப்டன் கோலி நம்புகிறார். அதே எதிர்பார்ப்பு பரவலாக ரசிகர்களிடையேயும் உள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்து தொடர் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சாஹல், நானும் விராட் கோலியும் இணைந்து பேசி சில திட்டங்களை வகுத்துள்ளோம். இங்கிலாந்துக்கு எதிராக அவற்றை சிறப்பாக செயல்படுத்துவேன். இங்கிலாந்து தொடருக்காக கடுமையாக பயிற்சி எடுத்துள்ளேன். 

இங்கிலாந்துக்கு எதிராக ஏற்கனவே இந்தியாவில் ஆடியுள்ளேன். எனினும் இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஆடுவது என்பது வித்தியாசமான அனுபவம் தான். எனினும் நான் தயாராக இருக்கிறேன். கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக எப்படி பந்துவீசினேனோ அதேபோல் பந்துவீச விரும்புகிறேன். இரண்டு புதுவிதமான வித்தைகளை கற்றுள்ளேன். அவற்றை இங்கிலாந்துக்கு எதிராக பயன்படுத்துவேன் என சாஹல் தெரிவித்தார். 

கடந்த 2017ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் சாஹல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்த போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதை குறிப்பிட்டுத்தான் அதேபோல சிறப்பாக வீச விரும்புவதாக சாஹல் தெரிவித்துள்ளார். 
 

click me!