Wimbledon: விம்பிள்டன் 2024: தொடர்ந்து 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாதனை!

Published : Jul 14, 2024, 11:17 PM ISTUpdated : Jul 14, 2024, 11:41 PM IST
Wimbledon: விம்பிள்டன் 2024: தொடர்ந்து 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாதனை!

சுருக்கம்

விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

விம்பிள்டன் 2024 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இருவரும் மோதினர். ரோகித் சர்மா, பெப் கார்டியோலா, டேவிட் பெக்காம் போன்ற பல விளையாட்டு பிரபலங்கள் விம்பிள்டனின் கடைசி சில சுற்று போட்டிகளில் ரசிகர்களின் பார்வையில் தென்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியின் முதல் செட்டை 6-2 என்று அல்காரஸ் கைப்பற்றினார்.

 

 

இதைத் தொடர்ந்து 2ஆவது செட்டையும் 6-2 என்று கைப்பற்றினார். அதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. 3ஆவது செட்டில் இருவரும் சமமாக விளையாடிய நிலையில் அல்காரஸ் 4-3 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு சுதாரித்திக் கொண்ட ஜோகோவிச் 5-5 என்று ஆட்டத்தையே மாற்றினார். அதன் பிறகு போட்டியானது 6-6 என்று மாறவே டை பிரேக்கருக்கு சென்றது.

மிகவும் பரபரப்பான டை பிரேக்கரில் அல்காரஸ் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இறுதியாக அல்காரஸ் 6-2, 6-2 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி தொடர்ந்து 2ஆவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்றிருந்தால் 8ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றிருப்பார். அதோடு 25ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் வென்றிருப்பார். 25ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் வெல்வது என்பது ஒவ்வொருவருக்கும் கனவு.

ஆனால், அந்த கனவை தற்போது ஜோகோவிச் கோட்டைவிட்டுள்ளார். எனினும் அல்காரஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக விம்பிள்டன் வென்று சாதனை படைத்துள்ளார். சாம்பியனான அல்காரஸிற்கு ரூ.265 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொடருக்கு மட்டும் ரூ.500 கோடி பரிசுத் தொகை அறிவித்திருக்கின்றனர். கடந்த ஆண்டும் இதே போன்று தான் இருவரும் இறுதிப் போட்டியில் மோதினர். இந்தப் போட்டியில் அல்காரஸ் முதல் முறையாக விம்பிள்டன் டிராபி கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!