எங்க வீரர்களை கெடுத்து குட்டிச்சுவராக்குனது ஐபிஎல் தான்!! வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 5, 2018, 11:41 AM IST
Highlights

ஐபிஎல் போட்டிகளின் மூலம் அதிகமான பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைப்பதால், அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறுவதிலேயே வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் கவனம் இருப்பதால், எங்கள் அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டே நாசமாகிவிட்டது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர் வேதனை தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் போட்டிகளின் மூலம் அதிகமான பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைப்பதால், அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறுவதிலேயே வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் கவனம் இருப்பதால், எங்கள் அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டே நாசமாகிவிட்டது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர் வேதனை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் ஆகிய இரண்டு விதமான கிரிக்கெட்டிலும் வலுவான அணியாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று கத்துக்குட்டி அணி போல ஆடிவருகிறது. அனுபவம் வாய்ந்த அணியை போலவே ஆடுவதில்லை. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. 

இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலிங்கை அசால்ட்டாக எதிர்கொண்டு இந்திய வீரர்கள் ஆடிவருகின்றனர். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பவுண்டரிக்கு அனுப்பிக்கொண்டே இருந்த பிரித்வி ஷா அறிமுக போட்டியிலேயே சதமடித்தார். புஜாரா 86 ரன்கள், ரிஷப் பண்ட் 92 ரன்கள் குவித்தனர். அபாரமாக ஆடிய கோலி, சதம் விளாசி தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்களை கடந்து ஆடிவருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் சொல்லும்படியாக இல்லை. இளம் வீரர்களை கொண்ட அனுபவம் குறைந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கிரிக்கெட் ஐபிஎல்லால் நாசமாகிவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர் வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கார்ல் ஹூப்பர், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ஊதிய பிரச்னை இருந்தது. ஆனால் அப்பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. எனினும் ஐபிஎல் வந்தபிறகு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், பணமழை பொழியும் அந்த லீக் போட்டியில் எப்படியாவது ஒப்பந்தமாகிவிட வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக உள்ளனரே தவிர நாட்டுக்காக ஆடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. 

ஊதிய பிரச்னை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்டு, சுனில் நரைன் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதையே விரும்புகிறார்கள். ஐபிஎல் தொடர் 6 வாரங்களில் முடிந்துவிட்டாலும் சுனில் நரைன் போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவதில்லை. 

டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக விளையாடி தங்களை மெருகேற்றிக் கொள்ளாதவரை அவர்களை முழுமையான கிரிக்கெட் வீரர்களாகக் கூற முடியாது. டெஸ்ட் போட்டிகளி்ல அதிகமாக விளையாடினால்தான் முழுமையான வீரராக மாற முடியும். ஆனால், வீரர்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுவிட்டு மற்ற நாட்டு லீக் போட்டிகளில் விளையாட முயல்வது எந்த விதத்தில் நியாயம்? என கார்ல் ஹூப்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

click me!