ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் கோவை துவம்சம் செய்தது தமிழகம்…

 
Published : Feb 01, 2017, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் கோவை துவம்சம் செய்தது தமிழகம்…

சுருக்கம்

சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்டின் தெற்கு மண்டல போட்டியில் கோவா அணியை ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து தமிழக அணி வெற்றிப் பெற்றது.

தமிழகம் மற்றும் கோவா அணிகளுக்கு இடையே சையது முஷ்டாக் அலி டி20 சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கோவா அணி, 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியில் ஸ்வப்னிஸ் அஸ்னோத்கர் அதிகபட்சமாக 33 ஓட்டங்கள் எடுத்தார்.

தமிழக தரப்பில் ரஹீல் ஷா, முருகன் அஸ்வின், பாபா அபராஜித் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய தமிழக அணி, 13.1 ஓவர்களில் ஓர் விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக் கண்டது.

அபினவ் முகுந்த் அரைசதம் கடந்து 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வித்திட்டனர்.

நாராயணன் ஜெகதீசன் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற களிப்பில் தமிழக அணி வீரர்கள் இருக்கின்றனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!