டி20 தொடரையும் கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

 
Published : Feb 01, 2017, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
டி20 தொடரையும் கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

சுருக்கம்

இந்தியாவும், இங்கிலாந்தும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற, 2-ஆவது போட்டியில் 5 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது இந்தியா.

இந்த நிலையில், இந்த கடைசி ஆட்டத்தில் வெற்றி கண்டு தொடரை எந்த அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

இந்திய அணியைப் பொறுத்த வரையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்ட நிலையில் டி20 தொடரையும் கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது.

மறுமுனையில் இங்கிலாந்து அணி, டி20 தொடரையாவது கைப்பற்றி தனது இந்திய சுற்றுப் பயணத்தை கௌரவத்துடன் நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, இந்த ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி வீரர்களைப் பொருத்த வரையில், கடந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 21 ஓட்டங்களில் வீழ்ந்த கேப்டன் கோலி, இந்த ஆட்டத்தில் ரன்களை குவிப்பாரா?

அதேபோல், கடந்த ஆட்டத்தில் 71 ஓட்டங்கள் விளாசிய கே.எல்.ராகுல், இந்த ஆட்டத்திலும் அணியின் ஸ்கோருக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி, யுவராஜ், ரெய்னா, மணீஷ் பாண்டே ஆகியோர் ரன் குவிப்புக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்பலாம்.

பந்துவீச்சைப் பொருத்த வரையில், நாகபுரி போட்டியில் கலக்கிய பூம்ரா இதிலும் சிறப்பாக செயல்படுவார். அதேபோல், நெஹ்ரா, சுழற்பந்து வீச்சாளர்களான அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் ஆகியோரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்க உள்ளனர்.

இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், கேப்டன் மோர்கன் அணியின் ஸ்கோர் உயர பக்கபலமாக இருப்பார். ஜோ ரூட் அவருக்கு உறுதுணையாக இருக்க, பந்துவீச்சில் மில்ஸ், ஜோர்டான், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்திய விக்கெட்டுகளை வீழ்த்த உள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!