bwf world championship: உலக பாட்மிண்டன் : இந்திய ஜோடி சிராக் ஷெட்டி, சத்விக்சாய்ராஜ் வெண்கலம் வென்று சாதனை

Published : Aug 27, 2022, 10:56 AM IST
bwf world championship: உலக பாட்மிண்டன் : இந்திய ஜோடி சிராக் ஷெட்டி, சத்விக்சாய்ராஜ் வெண்கலம் வென்று சாதனை

சுருக்கம்

டோக்கியோவில் நடந்து வரும் பாட்மிண்டன் வேர்ல்ட் பைனல்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ராணிகிரெட்டி மற்றும் சிராஜ் ஷெட்டி ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

இதுவரை உலக பாட்மிண்டன் வேர்ல்ட் பைனல்ஸ் போட்டியில் எந்த இந்திய ஜோடியும் பதக்கம் வென்றது கிடையாது. முதல் முறையாக சிராக், சத்விக் ஜோடி பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

இன்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில், மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூ வி ஜோடியை எதிர்த்து இந்திய வீரர்கள் சத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி களமிறங்கினர். இந்த ஆட்டத்தில் மலேசிய ஜோடியிடம், 22-20, 18-21, 16-21 ஆகிய செட்களில் போராடி இந்திய வீரர்கள் ஆரோன், சோ வூ ஜோடி தோற்றனர். 

முதல் செட்டை இந்திய ஜோடி வென்றநிலையில், 2வது செட்டை போராடி கோட்டை விட்டனர். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3வது செட்டிலும் இந்திய ஜோடி கடுமையாகப் போராடியபோதிலும் மலேசிய ஜோடி வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு.. ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு கிடைக்கும்?
சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?