பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று பிரேக்கிங். இதில், 2 நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதற்காக 16 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என்று மொத்தமாக 32 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்னும் 7 நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 32 விளையாட்டுகள் நடைபெறுகிறது. இதில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 204 நாடுகளிலிருந்து 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
சஞ்சு சாம்சனை நீக்க முடிவு – ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் இல்லை, டி20ல எடுத்து வச்சு பாரபட்சம்!
இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் 16 விளையாட்டுகளில் இடம் பெற்று விளையாடுகின்றனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் புதிதாக் பிரேக்கிங் (பிரேக் டான்ஸ்) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி போடுவார்கள். அதாவது, பாரிஸ் விளையாட்டு போட்டிகளில் ஒரு ஆண்கள் மற்றும் ஒரு பெண்களுக்கான போட்டிகள் இடம் பெறும். 16 பி பாய்ஸ் மற்றும் 16 பி கேர்ல்ஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதுவார்கள்.
துணை கேப்டனும் இல்ல, திருமண வாழ்க்கையும் முறிவு – பாண்டியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்!
இது கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யூத் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது முதல் முறையாக முதன்மை ஒலிம்பிக் மேடையில் இடம் பெறுகிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரேக்கிங் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அமெரிக்கர் விக்டர் மாண்டால்வோ ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேக்கிங் என்பது பிரேக் டான்ஸிங் என்றும் சொல்லப்படுகிறது. இது, 1970 ஆம் ஆண்டிற்கு பிறகு நியூயார்க்கின் சவுத் பிராங்க்ஸில் தோன்றிய தெரு விளையாட்டு. DJ, rapping மற்றும் கிராஃபிட்டி ஆகியவற்றுடன் ஹிப்-ஹாப் கலாச்சார்த்தின் கூறுகளில் பிரேக் டான்சிங்கும் ஒன்று.
4 வருட குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாண்டியா – இனிமேல் தனிக்காட்டு ராஜா தான்!
இது Foot work, Floor moves, and Freezes ஆகியவற்றை உள்ளடக்கியது. பெரும்பாலும் ஒரு கை மற்றும் ஒரு கால் கொண்டு ஃபேலன்ஸ் செய்யப்படுகிறது. இளைஞர்களை கவர்வதற்கும், ஒலிம்பிக் மீதான ஆர்வத்தை தூண்டுவதற்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி பிரேக் டான்ஸிங்கிற்கு ஆடிஷனை அறிவித்தது.
விதிமுறைகள்:
பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் பிரேக்கிங் போட்டியில் 2 நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இதற்கு 32 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். இது ஆண்களுக்கும், பெண்களுக்குமான 1-1 போட்டி. அதாவது 16 ஆண்களும், 16 பெண்களும் தனியாக ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றனர். மேலும், இந்த போட்டியானது ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
6 வகையான டான்ஸ் ஸ்டெப் பாலோ செய்யப்பட்டு அதன்படி 9 நடுவர்கள் இந்தப் போட்டியில் வெற்றியாளர்களை தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.