இந்திய அணியில் தொடர்ந்து சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெறவில்லை. மாறாக டி20 கிரிக்கெட்டில் இடம் பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. இதில், முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி கடைசியாக அடுத்த 4 போட்டியிலும் வெற்றி பெற்று 4-1 என்று தொடரை கைப்பற்றியது. ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
துணை கேப்டனும் இல்ல, திருமண வாழ்க்கையும் முறிவு – பாண்டியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்!
டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மேலும், துணை கேப்டன் பொறுப்பும் பாண்டியவிற்கும் வழங்கப்படவில்லை. ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
டி20 தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்
4 வருட குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாண்டியா – இனிமேல் தனிக்காட்டு ராஜா தான்!
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஷர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
கவுதம் காம்பீர் ஆலோசகராக இருந்த கேகேஆர் அணிக்காக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவும் அணிக்கு திரும்பியுள்ளார். ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், ஷிவம் துபேவிற்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் எடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு போட்டியில் கூட இடம் பெற்று விளையாடவில்லை. அதே போன்று தான் தற்போது இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். ஆனால், வாய்ப்பு என்னவோ வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. டி20 தொடரில் இடம் பெற்ற சாம்சனுக்கு ஒரு நாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணிக்கு திரும்பி வந்த நிலையில் சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு அவர்தான்! தல தோனியின் மனதில் இடம்பிடித்த கோலிவுட் நடிகர்!