இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், சுப்மன் கில் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்று கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். துணை கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது.
4 வருட குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாண்டியா – இனிமேல் தனிக்காட்டு ராஜா தான்!
undefined
டி20 தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஷர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் துணை கேப்டனாக கூட நியமிக்கப்படவில்லை. டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இலங்கை தொடரில் தனிப்பட்ட காரணம் தொடர்பாக ஹர்திக்பாண்டியா இடம் பெறமாட்டார் என்று செய்தி வெளியான நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நியமிக்கப்பட்டார். இது ஒரு புறம் இருக்க ஹர்திக் பாண்டியாவின் 4 வருட குடும்ப வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஆம், மனைவி நடாஷாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு அவர்தான்! தல தோனியின் மனதில் இடம்பிடித்த கோலிவுட் நடிகர்!
ஹர்திக் பாண்டியாவின் இந்த பிரிவு அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடர் வரை அவரை விமர்சனம் செய்த ரசிகர்கள் டி20 உலகக் கோப்பை டிராபியோடு வந்த அவரை ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடி மகிழ்கிறது. மும்பையில் கொடுக்கப்பட்ட வரவேற்பைப் போன்று வதோதரா சென்ற பாண்டியாவிற்கு அங்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.