22 ஆண்டுகால கால்பந்து வரலாற்றில் 92 முறை ஹாட்ரிக் கோல் அடித்து உலக சாதனை படைத்தவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் பீலே.
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் கால்பந்து வீரர் பீலே. கடந்த 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி டிரெசு கோரகோயெசு என்ற பகுதியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். கடந்த 1957 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி மரக்கானா நாட்டில் நடந்த அர்ஜெண்டினாவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் பிரேசில் 2-1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது. இந்த போட்டியில் பீலே முதல் முறையாக கோல் அடித்தார். அப்போது அவருக்கு வயது 16.
ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்து: பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!
கால்பந்து போட்டியை அமெரிக்காவில் பிரபலப்படுத்திய பெருமை இவரையே சேரும். உலக அமைதிக்கான பரிசும் பெற்றுள்ளார். பீலேயின் 22 ஆண்டுகள் கால்பந்து வரலாற்றில் மொத்தமாக 1282 கோல்கள் வரையில் அடித்துள்ளார். ஒரே போட்டியில் தொடர்ந்து 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் கோல்கள் போடுவதிலும் உலக சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 92 முறை ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ளார். உலகின் மிகச்சிறந்த வீரராக கருதப்படும் பீலே கருப்பு முத்து என்று அழைக்கப்படுகிறார்.
தாமஸ் ஆல்வாஸ் எடிசனின் நினைவாக பீலேவுக்கு எடிசன் என்று பெயர் சூட்டப்பட்டது. சான்டாஸ் குழுவில் சேர்ந்த பீலே அதே ஆண்டில் 17 கோல்கள் அடித்தார். அதன் பயனாக 1958 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணியில் இடம் பிடித்தார். 1958 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்வீடனை 2-5 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக பிரேசில் உலகக் கோப்பை கால்பந்து டிராபியை வென்றது. அப்போது அவருக்கு வயது 17.
இதைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரேசில், இத்தாலியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பீலே. கடந்த 1974 ஆம் ஆண்டு கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி காஸ்மாஸ் தனது குழுவுக்காக விளையாடும்படி அவரை கேட்டுக் கொண்டது.
மும்பையில் லிங்கிங் ரோடு பகுதியில் வலம் வரும் ஷ்ரேயாஸ் ஐயர்!
இதையடுத்து, இரண்டு ஆண்டுகள் அமெரிக்கர்களுக்காக தனது திறமையை வெளிப்படுத்திய பீலே, கடந்த 1978 ஆம் ஆண்டு கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பீலே உடல் நலக் குறைவால் நேற்று 29 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 82.