இந்தியாவின் மோசமான பவுலர் புவனேஷ்வர் குமார்..? நாம சொல்லல.. நம்பர் சொல்லுது

By karthikeyan VFirst Published Jan 12, 2019, 10:49 AM IST
Highlights

இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் - பும்ரா வேகப்பந்து ஜோடி, மிகச்சிறந்த ஜோடியாக உள்ளது. புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கின்றனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் 100வது விக்கெட்டை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். ஃபின்ச்சை அவுட்டாக்கியதுதான் புவனேஷ்வர் குமாரின் 100வது விக்கெட். 

இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் - பும்ரா வேகப்பந்து ஜோடி, மிகச்சிறந்த ஜோடியாக உள்ளது. புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கின்றனர். ஒருநாள் அணியில் பேட்டிங்கில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி பேட்டிங் அணியாக திகழ்ந்து வந்த இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ராவின் வருகைக்கு பிறகுதான் மிரட்டலான பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. 

இருவரும் இணைந்து எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர். விக்கெட் யாருக்கு வேண்டுமானாலும் விழுகலாம். ஆனால் நெருக்கடி என்னவோ இருவரும் இணைந்துதான் கொடுக்கின்றனர். அந்த வகையில் இருவருமே சம அளவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில் ஒரு பவுலர் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் அவருக்கான அங்கீகாரத்தை கொடுக்கும். 

புவனேஷ்வர் குமார் நல்ல ஸ்விங் பவுலர் மற்றும் எதிரணியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பவுலர் என்றாலும் அவர் தனது 100வது ஒருநாள் விக்கெட்டை 96வது போட்டியில் வீழ்த்தியிருப்பது மோசமான சாதனை. இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இந்த போட்டியில்தான் 100வது விக்கெட்டை வீழ்த்தினார். இது அவரது 96வது ஒருநாள் போட்டி. 

இதன்மூலம் 100 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்த அதிக போட்டிகளை எடுத்துக்கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரவி சாஸ்திரிக்கு அடுத்த 5வது இடத்தை பிடித்துள்ளார். கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ், சாஸ்திரி ஆகிய நால்வருமே பார்ட் டைம் பவுலர்கள். ஆனால் புவனேஷ்வர் குமார் தொழில்முறை பவுலர். எனவே அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்த 96 போட்டிகளை எடுத்துக்கொண்டது மோசமான சாதனைதான். 

மிக விரைவாக 100 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்களில் இர்ஃபான் பதான்(59 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். ஜாகீர் கான் 65 போட்டிகளிலும் அகார்கர் 67 போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 
 

click me!