கோலியின் ஆஸ்தான பவுலருக்கே டீம்ல இடம் இல்ல!! ஆல்ரவுண்டர் இடத்தை அவரு புடிச்சுட்டாரு.. முதிர்ச்சியடைந்த கோலியின் அணி தேர்வு

By karthikeyan VFirst Published Jan 12, 2019, 9:11 AM IST
Highlights

குல்தீப்பின் கையசைவுகளை பேட்ஸ்மேனால் கண்டுபிடிக்க முடியாது. அதுவே குல்தீப்புக்கு மிகப்பெரிய பலம். ஆனால் சாஹல் அப்படியான மிகச்சிறந்த பவுலர் கிடையாது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கி போட்டி நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்த போட்டிக்கான இந்திய அணி நல்ல கலவையிலான அணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலியின் அணி தேர்வு முன்பைவிட தற்போது முதிர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் குதிரைக்கு கடிவாளம் போட்டது போல ஒரே மாதிரியான அணியை தேர்வு செய்யும் கோலி, இப்போதெல்லாம் நல்ல கலவையிலான அணியை தேர்வு செய்துவருகிறார். அவரது கேப்டன்சி முதிர்ச்சியை இது காட்டுகிறது. 

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே குல்தீப், சாஹல் ஆகிய இரண்டு ஸ்பின்னர்கள் இல்லாமல் கோலி களமிறங்கியதே இல்லை. குல்தீப் யாதவ் வெரைட்டியான பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்துவார். குல்தீப்பின் கையசைவுகளை பேட்ஸ்மேனால் கண்டுபிடிக்க முடியாது. அதுவே குல்தீப்புக்கு மிகப்பெரிய பலம். ஆனால் சாஹல் அப்படியான மிகச்சிறந்த பவுலர் கிடையாது. ஆனாலும் அவரை அணியில் எடுத்துக்கொண்டே இருந்தார் கோலி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் ஆல்ரவுண்டர் அவசியம் என்பதால் சாஹலை நீக்கிவிட்டு, இரண்டாவது ஸ்பின் பவுலிங் ஆப்ஷனாக ஜடேஜாவை எடுத்துள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் ஆடியிருக்க வேண்டிய நிலையில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் இருக்கிறார். எனவே அவர் ஆடாததால், ஆல்ரவுண்டர் இடத்தை ஸ்பின் ஆல்ரவுண்டரான ஜடேஜா அணியில் இடம்பிடித்துள்ளார். குல்தீப்பின் மிரட்டலான ஸ்பின், ஜடேஜாவின் அனுபவம் என நல்ல ஸ்பின் ஜோடியாக இது இருக்கும்.

ரோஹித், தவான், கோலி, ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, ஜடேஜா, குல்தீப் ஆகியோருடன் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. புவனேஷ்வர் குமார், ஷமி, கலீல் அகமது ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். 

இதன்மூலம் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் 7 பேட்ஸ்மேன்கள் என நல்ல கலவையில் உள்ளது இந்திய அணி.
 

click me!