அதை மட்டும் வெற்றிகரமா செஞ்சுட்டா நாங்க ஜெயிச்சுடுவோம்!! ஆஸ்திரேலிய கேப்டனின் அதிரடி திட்டம்

By karthikeyan VFirst Published Jan 11, 2019, 6:05 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது வெல்லும் முனைப்பில் உள்ளது. 
 

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்திய அணி ஆடும் லெவன் வீரர்களை இன்னும் அறிவிக்கவில்லை. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தவித்துவரும் அந்த அணி, ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவருகிறது. அந்த அணி கடைசியாக ஆடிய 20 போட்டிகளில் 3ல் தான் வென்றுள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அணியை வலுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு எதிரான தொடரில் சில முயற்சிகளை செய்கிறது ஆஸ்திரேலிய அணி. அலெக்ஸ் கேரி தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். அதேபோல 8 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் ஆட உள்ளார். 

இவ்வாறு பல பரிசோதனை முயற்சிகளை இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணி, அணியை செட் செய்வதற்கே போராடிவரும் நிலையில், இந்திய அணியோ வலுவான பேட்டிங் மற்றும் பவுலிங்குடன் களமிறங்குகிறது. ரோஹித், தவான், கோலி என இந்திய டாப் ஆர்டர்கள் வலுவாக உள்ளது. கோலியும் ரோஹித்தும் தான் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்கள். ரோஹித், கோலி ஆகிய இருவருமே களத்தில் நிலைத்துவிட்டால் பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடியவர்கள். தவான் பெரிய இன்னிங்ஸ் ஆடாவிட்டாலும் ஆடும் சில ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆட்டத்தையே புரட்டி போட்டு விடுவார். புவனேஷ்வர் குமார், ஷமி, கலீல் அகமது என வேகப்பந்து வீச்சும், குல்தீப், சாஹல் என ஸ்பின் பவுலிங்கும் சிறப்பாகவே உள்ளது. 

எனவே இந்திய அணியை எதிர்கொண்டு வெல்வது தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு சாதாரண காரியம் அல்ல. இந்நிலையில், இந்தியாவுடனான ஒருநாள் தொடர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், கடந்த ஓராண்டாக கோலி, தவான், ரோஹித் ஆகிய மூவரும் அபாரமாக ஆடி வருகின்றனர். அவர்கள் தான் பெரும்பாலான பந்துகளை ஆடி அதிக ரன்களை குவிக்கின்றனர். மூவருமே களத்தில் நிலைத்துவிட்டால் பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார்கள். அதன்பிறகு அவர்களை வீழ்த்துவது கடினமாகிவிடும். எனவே அவர்களை விரைவில் வீழ்த்த வேண்டியது அவசியம் என ஃபின்ச் தெரிவித்துள்ளார். 
 

click me!